செவ்வாய், 3 அக்டோபர், 2017

மருத்துவத்திற்கான நோபல் பரிசு - அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வென்றனர்! October 03, 2017

​மருத்துவத்திற்கான நோபல் பரிசு - அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வென்றனர்!



2017ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளான ஜெப்ரி சி ஹால், மைக்கேல் ரோஷ்பேஷ், மைக்கேல் யங் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

கலை, அறிவியல், இலக்கியம், கணிதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் குழு விருதுகளை அறிவித்து கவுரவிக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு முதலாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகளான ஜெஃப்ரி சி ஹால், மைக்கேல் ரோஷ்பேஷ், மைக்கேல் யங் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

சூரியனைச் சுற்றும் பூமியில் பகல், இரவு என காலச்சூழல் மாறும் போது, அதற்கு ஏற்ப உயிரினங்கள், தாவரங்கள், பேக்டீரியா போன்ற நுண் உயிரிகள், தங்கள் உயிர்ச் சூழலை எப்படி மாற்றி அமைத்துக் கொள்கின்றன என்பது பற்றி இவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், உயிர்ச் சூழலை மாற்றியமைக்க உதவும் மூலக்கூறுகளை இவர்கள் கண்டறிந்தனர். இந்த சாதனைக்காக மூவருக்கும் மருத்துவ நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக விருதுக் குழு தெரிவித்துள்ளது. 

நாளைய தினம் இயற்பியலுக்கான நோபல் பரிசும், வரும் 4ம் தேதி வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.