செவ்வாய், 3 அக்டோபர், 2017

​நடராஜன் கவலைக்கிடம் - 15 நாள் பரோல் கேட்கும் சசிகலா! October 03, 2017

​நடராஜன் கவலைக்கிடம் - 15 நாள் பரோல் கேட்கும் சசிகலா!



அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை குலோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, பரோல் கேட்டு இன்று விண்ணப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை உடனிருந்து கவனித்துக் கொள்வதற்காக, சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிப்பார் என தெரிகிறது. அதிமுக அம்மா அணியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தி இந்தத்தகவலை உறுதிசெய்துள்ளார். சசிகலா பரோல் கேட்க உள்ளதாகவும், நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.