ஞாயிறு, 8 அக்டோபர், 2017

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய இன்று சிறப்பு முகாம்! October 08, 2017

​வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய இன்று சிறப்பு முகாம்!


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் செய்வற்கான சிறப்பு முகாம், தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, கடந்த ஜனவரி 1ம் தேதியை  தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள்  மற்றும் தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளை சேர்த்தல் உள்ளிட்டவை தொடர்பான சிறப்புப்பணிகள் இன்று நடைபெற உள்ளது.  

வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களது குடும்பத்திற்கு உறுப்பினர்கள் படிவத்தை பெறுதல், ஒரு சட்டப்பேரவை தொகுதிக்குள்ளாகவே மாற்றியிருக்கும் பெயர்களை திருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கும் சிறப்பு முகாம்களில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட உள்ளன. 

இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த பகுதிகளில் இருக்கும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று பொதுமக்கள் திருத்தங்களை செய்துகொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி  தெரிவித்துள்ளது. 

சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்வதற்கான முகாம்கள் நடைபெறுகின்றன. வரும் 23 ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts: