பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கான போட்டியாளர்கள் பட்டியலில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயர் இடம்பெற்றிருக்கலாம் என, பிரபல அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்ட்ரிட் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட Clarivate Analytics என்ற நிறுவனம், பல்வேறு ஆய்வுகளை நடத்தி, நோபல் பரிசுக்கான போட்டியாளர்களின் உத்தேச பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்களில் 6 பேரில், ஒருவருக்கு வழங்கப்படலாம் என அந்த நிறுவனம் கணித்துள்ளது.
அந்த 6 போட்டியாளர்களின் பட்டியலில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனை, பிரபல அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்டீரிட் ஜெர்னல் தெரிவித்துள்ளது.
நிறுவன நிதி நிர்வாகத்தில் அணுகுமுறையில் புதிய மாற்றங்களை கொண்டு வந்ததற்காக ரகுராம் ராஜனுக்கு நோபல் பரிசு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பலன் தராது என்றும், பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்றும் ரகுராம் ராஜன் முன்கூட்டியே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரகுராம் ராஜன் 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்திற்காக நோபல் பரிசை ரகுராம் பெற்றால் இப்பிரிவில் அமர்தியா சென்னுக்கு அடுத்தபடியாக நோபல் பெரும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.