கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தையடுத்த கருங்கல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராபர்ட் ஜெயன், புதுக்கடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை, சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டார்.
அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல், 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது. அப்போது திடீரென அந்த நபர், பணத்தை பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற நிலையில், உதவி ஆய்வாளர் ராபர்ட் ஜெயன், தனது இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றார்.
தமிழக எல்லையைத் தாண்டி, கேரளாவின் இஞ்சிவிளை பகுதியில் வைத்து, ஹவாலா பணம் கடத்தி சென்ற நபரை பிடித்தார்.
எனினும், கேரள போலீசார் சம்பவ இடத்திற்கு வர தாமதம் ஏற்பட்டதால், ஹவாலா கும்பலை சேர்ந்தவர்கள் உதவி ஆய்வாளர் மற்றும் செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களை நடுரோட்டிலேயே வைத்து தாக்கிவிட்டு பணத்துடன் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.