கீழடியில் தமிழர்களின் தொன்மையை அறிந்துகொள்வதற்காக மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2 ஆண்டுகள் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளின் போது 2200 ஆண்டுகளுக்கும் அதிக தொன்மையான தமிழர் நாகரீகம் வெளிப்பட்டது.
இதனிடையே, கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை பெங்களூரு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அகழாய்வுப் பணிகளை திறம்பட மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கீழடி அகழாய்வுப் பணிகளுக்கு ஸ்ரீராம் என்பவரை கண்காணிப்பாளராக நியமித்தது அகழாய்வுப் பணிகள் தொடரப்பட்டன. தெற்கு புறத்தில் கட்டடங்களின் மீதம் இருக்கலாம் என அமர்நாத் தலைமையிலான குழுவினர் கணித்திருந்த நிலையில் ஸ்ரீராம் தலைமையிலான குழுவினர் வடக்கு புறத்தில் அகழாய்வு மேற்கொண்டதும், முந்தைய இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிகமிக குறைவான குழிகளைப் போட்டு அகழாய்வினை மேற்கொண்டதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
3ம் கட்ட அகழாய்வு அறிக்கையை அளித்த ஸ்ரீராம் கீழடியில் கட்டடங்களின் தொடர்ச்சி ஏதுமில்லை என தெரிவித்திருந்தார். இதனை அடுத்து, 3ம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் இன்று மூடப்பட்டன.
இதனிடையே, சிவகங்கை மாவட்டம் கீழடியில் 4ம் கட்ட ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, கீழடியில் விரைவில் நான்காம் கட்ட பணிகள் தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.
கீழடியில் சர்வதேச தரத்திலான கண்காட்சி அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்படும் என்றும் அப்போது பாண்டியராஜன் உறுதியளித்தார். தமிழகத்தை பொறுத்தளவில் ஆண்டுக்கு ஒரு இடத்தில் புதிய அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் விளக்கமளித்தார்.