திங்கள், 9 அக்டோபர், 2017

சென்னையில் தொடரும் நள்ளிரவு சொகுசு கார் விபத்துகள் October 09, 2017



சென்னையில் தொடரும் நள்ளிரவு சொகுசு கார் விபத்துகள்
சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே, பெண் ஒருவர் மதுபோதையில் சொகுசு கார் ஓட்டியதில் விபத்து ஏற்பட்டது.

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில்,  டி.ஜி.பி. அலுவலகம் எதிரே நள்ளிரவு சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் வந்தது. திடீரென கட்டுபாட்டை இழந்த கார், சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. காரில் ஏர் பேக் எனப்படும் உயிர்காக்கும் பலூன் இருந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. 

எனினும், காரில் இருந்த 3 பெண்களில், காரை ஓட்டி வந்தவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணை அவரது நண்பர்கள் மற்றொரு காரில் ஏற்றிகொண்டு, போலீசார் வருவதற்கு முன் அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

இதுகுறித்து தகவலறிந்த அடையாறு போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தை ஏற்படுத்திய பெண் யார், என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் நள்ளிரவில், அப்பகுதியில் தொடர்ந்து மதுபோதையில் அடிக்கடி கார் விபத்து ஏற்படுவதாக குற்றம்சாட்டினார்.

Related Posts: