திங்கள், 9 அக்டோபர், 2017

கும்பக்கரை அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! October 09, 2017

கும்பக்கரை அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த 2-ஆம் தேதி, கும்பக்கரை அருவிப் பகுதியில் கனமழை பெய்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அருவிப் பகுதியில் அமைக்கப்பட்ட படிக்கட்டுகள், கைப்பிடி கம்பிகள் கனமழையால் அடித்து செல்லப்பட்டன.

இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான நிலையில், சேதங்களை சீரமைக்கும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டனர்.

தொடர்ந்து 37 நாட்களுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். இதனையடுத்து அருவியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

Related Posts: