திங்கள், 9 அக்டோபர், 2017

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக புகார்! October 09, 2017

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக புகார்!


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

காரைக்குடி நகராட்சியில் உள்ள கல்லூரி சாலையில் தான், அழகப்பா பல்கலைக்கழகம், பள்ளிகள், கல்லூரிகள், மத்திய மின்வேதியல் ஆய்வகம், வங்கிகள், தபால் நிலையம், மாவட்ட நூலகம் உள்ளிட்டவை உள்ளன.

இந்த சாலையை தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் சுற்றித்திரியும் கைவிடப்பட்ட கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே நகராட்சி நிர்வாகம், கால்நடைகளை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts: