புதன், 11 அக்டோபர், 2017

பத்திரப் பதிவுத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு October 11, 2017

பத்திரப் பதிவுத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு


சொத்துக்களின் மதிப்பை குறைத்து காட்டி, முத்திரை தாள் கட்டணத்தில் இழப்பு ஏற்படுத்தியிருந்தால், பத்திரங்களை திருப்பியளிக்க வேண்டும் என பத்திரப் பதிவுத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய முத்திரைத் தாள் சட்டத்தின்படி, சொத்துக்களின் மதிப்பை குறைத்து காட்டி, முத்திரைத் தாள் கட்டணத்தில் முறைகேடு செய்ததாக பத்திரப் பதிவுத்துறை அதிகாரி சந்தேகம் கொண்டால், சம்பந்தப்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதை நிறுத்தி வைக்கலாம். 

இப்படி நிறுத்தி வைக்கப்படும் ஆவணங்களை விடுவிக்க கோரி பத்திரப்பதிவு செய்தவர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை நேற்று விசாரித்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முக சுந்தரம். சொத்துக்களின் மதிப்பை குறைத்துக்காட்டி, பத்திரப் பதிவு செய்ததால் அரசுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, சொத்து மதிப்பு மீது சந்தேகம் எழும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை நிறுத்தி வைக்க பத்திரப் பதிவுத் துறைக்கு உரிமை இருக்கிறது என்றாலும், சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறித்த ஆய்வுகளை குறித்த காலத்திற்குள் முடித்து பத்திரங்களை திருப்பியளிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். எனவே, அதற்கு உரிய காலக்கெடுவை நிர்ணயம் செய்யும் வகையில் பத்திரப் பதிவுத்துறை சட்டத்தை திருத்த  வேண்டும் என தமிழக  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Posts: