திங்கள், 8 மார்ச், 2021

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

 


Covid 19 cases increases for third consecutive day in Tamilnadu : கடந்த சில நாள்களாக கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக, தமிழகத்தில் கோவிட் -19-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் புதிய எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனையின் முடிவில், மொத்தம் 567 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கோவிட் -19 எண்ணிக்கையை மொத்தமாக 8,55,121-ஆக உயர்த்தியது. புதிய நோய்த்தொற்று வீதம் வெளியேற்ற விகிதத்தை (521) மிஞ்சியதால், தமிழ்நாட்டில் தற்போதைய கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,997-ஆக அதிகரித்தது.

பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர் சென்னை மாவட்டத்தில் உள்ளனர். அதாவது, சென்னையில் மட்டுமே 251 பேர் புதிதாகப் பதிவாகியுள்ளனர். சென்னையில் 78 வயதான பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இது, மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 12,518-ஆக உயர்த்தியது. மேலும், கோயம்புத்தூர் (49), திருச்சி (9) மற்றும் மதுரை (9) ஆகிய இடங்களிலும் சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் புதிய எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

இது நிச்சயம் மக்களுக்கான ரெட் அலெர்ட். வெளியே செல்லும்போது மாஸ்க் மற்றும் சானிடைசர் பயன்படுத்தி மேலும் கவனத்துடன் இருப்பது அவசியம்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/covid-19-cases-increases-for-third-consecutive-day-in-tamilnadu-chennai-corona-cases-tamil-251264/