வெள்ளி, 14 மே, 2021

கொரோனாவுக்கு எதிராக சேர்ந்தே போராடுவோம்” – மிதவை ஆம்புலன்ஸ் அமைத்து உதவும் இளைஞர்

 

Man starts floating ambulance service in Dal Lake amid Covid-19 surge

Man starts floating ambulance service : கொரோனா பெருந்தொற்று மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சுகாதாரத்துறை மீதான அழுத்தங்கள் நம்மை மேலும் கவலை அடைய செய்துள்ளன. தங்களால் இயன்ற அளவு ஒவ்வொருக்கு ஒருவர் உதவியாகவும் ஆறுதலாகவும் தேவையான நேரத்தில் உறுதுணையாக உடன் நிற்கின்றோம்.

இது போன்ற இக்கட்டான சூழலில் பலர் தங்களின் சொந்த சேமிப்பு, நகைகள் ஆகியவற்றை விற்று உதவிகளை புரிந்து வருகின்றனர். சிலர் உணவுகள் சமைத்து தருகின்றனர். சிலர் மருந்துகளை வாங்க தேவையான மூலங்களை ஆராய்ந்து சமூக வலைதளங்களில் தேவையான நபர்களுக்கு அளிக்கின்றனர். சிலர் பண உதவி அளிக்கின்றனர். இந்நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு தால் ஏரியில் படகு இல்லம் ஒன்றின் உரிமையாளர் தன்னுடைய படகை மிதக்கும் ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார் தாரிக் பட்லூ என்பவர்.

மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான மருத்துவத் தேவை அதிகரித்துவிட்டது. அதனால் என்னால் ஆன உதவியாக இதை செய்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். அவருடைய படகு இல்லத்தில் பி.பி.இ. கிட்கள், ஸ்ட்ரெச்சர்கள், சக்கர நாற்காலிகள் என்று அனைத்து முக்கிய மருத்துவ உபகரணங்களையும் அவர் வைத்துள்ளார்.

எச்சரிக்கை மணி மற்றும் ஒலிப்பெருக்கியுடன் உள்ள இந்த ஆம்புலன்ஸ் மூலம் அடிக்கடி மக்கள் முகக்கவசங்கள் அணிவதன் தேவை குறித்து கருத்துகளை பதிவு செய்வதோடு முகக்கவசங்கள் அணியுங்கள் என்று கோரிக்கையும் வைக்கிறார் இந்தன் நிறுவனர் தாரிக் அகமது பட்லூ. இவரின் மனிதாபிமான செயல்கள் குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

source : ANI, https://tamil.indianexpress.com/viral/man-starts-floating-ambulance-service-in-dal-lake-amid-covid-19-surge-302731/

Related Posts: