வியாழன், 13 மே, 2021

தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா : தனிமைப்படுத்தும் மையமாக மாறிய பள்ளிவாசல்

12.5.2021  தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள பள்ளிவாசல்  ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 12லட்சத்தை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மே 10-ந் தேதி முதல் முழு ஊராடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உச்சத்தை தொட்டு வரும் நிலையில், சென்னை உட்பட தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனா மருத்தவமனையில் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. மேலும் பல இடங்களில் மருத்துவமனையிகளில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெட் இருப்பது குறித்து விபரங்களை அறிய தமிழக அரசு சார்பில், ட்விட்டர் பேஜ் தொடங்கப்பட்டது.

மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தங்களது திருமண மண்டபத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதாக கவிஞர் வைரமுத்துவும், தனது கல்லூரியை பயன்படுத்திக்கொள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், இன்று சில பிரபலஙகளும், தங்களது இடங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தள்ளனர். அந்த வகையில், சென்னை அண்ணா நகரில், கொரேனா தொற்று நோயாளிகள் தங்களை தனிமைபடுத்தகிகொள்ள பள்ளிவாசல் ஒன்று தயார் செய்யப்ட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரில் 3 வது அவென்யூவில் உள்ள மஸ்ஜித் ஜாவீத், என்ற பள்ளிவாசல், கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட நோயாளிகள் தங்களை சில நாட்கள் தனிமைபடுத்திக்கொள்வதற்காக தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பள்ளிவாசல் தயார்படுத்தி இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள், சில நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு தங்குவதற்கு இடம் தேவைப்படும் நபர்களுக்கான இந்த மையத்தை அனுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-covid-19-masjid-javeed-has-opened-a-quarantine-centre-302452/

Related Posts: