புதன், 12 மே, 2021

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்; நீடிக்கும் குழப்பம்

11.5.2021  மத்திய அரசின் தாராளமயமாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி கொள்கையால், தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசிக்கான விலையை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. இது, கிராமங்கள் உள்பட பெருநகரங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.

நேற்று, கோ-வின் போர்ட்டலின் படி, மும்பையில் உள்ள எஸ்.என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு ரூ .700 வசூலிக்கிறது. சீரம் நிறுவனம் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்ற விலையை விட அங்கு 100 ரூபாய் அதிகம் வசூலிக்கப்படுகிறது. மும்பையின் நானாவதி மேக்ஸ் மருத்துவமனை, தடுப்பூசியின் ஒரு டோஸ் அளவுக்கு ரூ .900 விலையை நிர்ணயித்துள்ளது. டெல்லியில், பி.எல்.கே மேக்ஸ் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் போன்ற மருத்துவமனைகள், நானாவதி போன்றவை மேக்ஸ் ஹெல்த்கேரின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அங்கும் அதே அளவு விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் கோவாக்சின் ஒரு டோஸுக்கு ரூ .1,250 வசூலிக்கிறது. தனியார் சந்தைக்கு பாரத் பயோடெக் நிர்ணயித்த விலையை விட ரூ .50 அதிகம். இருப்பினும், கொல்கத்தாவின் உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஒரு டோஸுக்கு ரூ .1,500 வசூலிக்கப்படுவதாக கோவின் போர்ட்டல் மூலம் தெரிய வருகிறது.

மே 5 ஆம் தேதி நிலவரப்படி, பெங்களூரின் பிஜிஎஸ் க்ளெனீகல்ஸ் குளோபல் மருத்துவமனையும் கோவாக்சினுக்கு ஒரு டோஸுக்கு ரூ .1,500 வசூலித்து வருவதாக, அகில இந்திய மருந்து அதிரடி வலையமைப்பின் இணை இயக்குனர் மாலினி ஐசோலா மற்றும் கோட்பாட்டு இயற்பியலாளர் சித்தார்த்த தாஸ் இருவரின் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. ஐசோலா மற்றும் தாஸ், மே 5 முதல் 8 வரை முக்கிய நகரங்களில் கோ-வின் மீதான தனியார் மருத்துவமனை கட்டணங்களை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. அலுவலகங்கள் அல்லது அடுக்குமாடி கட்டிடங்களில் தடுப்பூசியை நிர்வகிக்கும்போது ரூ .1,500 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில், அவை கூடுதல் பயண மற்றும் தளவாட செலவுகளை உள்ளடக்கி உள்ளதாக தனியார் தடுப்பூசி மையங்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளுக்கு இடையில் தடுப்பூசியின் விலை நிர்ணயம் சுமார் 200-250 ரூபாய் ஆகும். இந்த வேறுபாடானது பெரும்பாலும் போதிய அளவிலான விநியோகம் மற்றும் விலைகளை நிர்ணயிப்பதற்கு பின்பற்றப்படும் செயல்முறையின் மீது வெளிப்படைத்தன்மை இல்லாதது போன்றவற்றால் இந்த வித்தியாசம் உருவாவதாக ஐசோலா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகள், தனியார் துறையில் சில முக்கிய மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனை சங்கிலிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களுக்கு இன்னும் போதிய அளவிலான தடுப்பூசிகள் இன்னும் கிடைக்கவில்லை. குறைவான தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களை கொண்ட நகரங்களில், செயல்படும் வசதிகள் அவற்றின் சேவைகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி உள்ளது. முந்தைய கட்டங்களில், மருத்துவமனைகள் தங்கள் சேவைக் கட்டணமாக தடுப்பூசியின் விலையை விட ரூ .100 க்கு மேல் வசூலிக்கும்படி தனியார் மையத்தால் கட்டாயப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனைகளில் தடுப்பூசி விவகாரங்களில் அதிக வெளிப்படைத்தன்மை இல்லை என ஆய்வாளர் ஐசோலா கூறியுள்ளார். தனியார் துறையில், தடுப்பூசி தாராளமய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மருத்துவ நிறுவனங்கள் தாங்கள் நினைக்கும் விலையை தடுப்பூசிக்கு நிர்ணயிக்கின்றனர். ஏனென்றால், தடுப்பூசியின் தேவை விநியோகத்தை விட அதிகமாக உள்ளது என்பதை நாம் அறிவோம் என்று ஐசோலா குறிப்பிட்டுள்ளார்.

தொழில் நிர்வாகிகள், தடுப்பூசி கொள்முதல் பேச்சுவார்த்தைகளில் தள்ளுபடிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை விலை வேறுபாட்டுக்கு காரணமாக கூறுகின்றனர். 2020 நவம்பரில் கொரோனா தடுப்பூசிகளுக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய அப்பல்லோ மருத்துவமனைகள் குழு, பாரத் பயோடெக்கிலிருந்து கோவாக்சின் தடுப்பூசியை ஒரு டோஸுக்கு 1000 ரூபாய்க்கு பெற முடிந்தது என்று குழுவின் நிர்வாக துணைத் தலைவர் ஷோபனா காமினேனி தெரிவித்துள்ளார். இந்த குழு தடுப்பூசி நிர்வாகம் மற்றும் ஆலோசனைக்கு ரூ .200 கட்டணத்தையும், ஜிஎஸ்டிக்கு ரூ .50 கட்டணத்தையும் சேர்த்துள்ளது. இதை நாங்கள் குறைக்க இயலாது என அவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தும் மணிப்பால் மருத்துவமனைகள், பாரத் பயோடெக்கிற்கு ஒரு டோஸுக்கு ரூ .1,200 செலுத்தியதாக மணிப்பால் கல்வி மற்றும் மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் ரஞ்சன் பை தெரிவித்துள்ளார். இது தடுப்பூசி மற்றும் ஜிஎஸ்டி வரியை நிர்வகிக்க ரூ .150 சேர்த்தது, ஒரு டோஸுக்கு ரூ .1,350 ஆக விலை கொண்டு வந்துள்ளது.

தடுப்பூசி நிர்வாக கருவிகள், கை சுத்திகரிப்பு மருந்துகள், ஊழியர்களுக்கான பிபிஇக்கள், காத்திருப்பு மருத்துவர்கள் மற்றும் உயிர் மருத்துவ கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட பிற செலவுகளை ஈடுசெய்ய மருத்துவமனை சங்கிலி ஒரு தடுப்பூசிக்கு ரூ .170-180 கட்டணம் வசூலித்துள்ளது. டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மூத்த மருத்துவர், தடுப்பூசியை சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் சேமிப்பதற்கான செலவுகள் மற்றும் மனிதவளம் மற்றும் தளவாடங்களின் கடுமையான நெருக்கடி ஆகியவையும் காரணிகளாகும் என்றார். பெரும்பாலான மருத்துவமனைகளில் தேவையான சேமிப்புக் கொள்கலன்கள் அல்லது மருத்துவ குளிர்சாதன பெட்டிகள் இல்லை. நாங்கள் திறந்த சந்தையில் இருந்து வாடகைக்கு அல்லது வாங்குகிறோம் என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசி போட வரும் நபர்கள் தொற்றுநோய்க்கு உள்ளாகி விடக் கூடாது என்பதற்காக நாங்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. நாங்கள் கூடுதல் செலவில் செவிலியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியிருக்கிறது. இந்த சூழ்நிலைகளில் யாரும் வேலை செய்ய தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/rs-700-rs-1500-amid-lack-of-clarity-what-private-hospitals-are-charging-covidshield-covaxin-302156/