செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

 தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 31 08 2021 

தமிழ் வளர்ச்சித்துறையில் 20 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டார். அதன்படி, தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றும், கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் எனக்கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, 2 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார். மேலும், பள்ளி மாணவர்களின் இலக்கிய திறனறி தேர்வு நடத்தி ஆண்டுதோறும் ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்படுவர் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழந்தமிழ் மற்றும் நவீன இலக்கியங்களை ஒளி நூல்களாக வெளியிட 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்றும், அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

source https://news7tamil.live/texts-of-tamil-writers-will-be-nationalized-minister-information.html

பள்ளிகள் திறப்பு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு

 வகுப்புகள் தொடங்கினாலும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்கள் எந்தவொரு இடையூறு இல்லாமல் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 31 08 2021

சென்னை அயனாவரம் ESIC மருத்துவமனையில் புதிய சிகிச்சைப் பிரிவை தொடங்கி வைத்தபின், மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் திட்டத்தையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கணேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்க உள்ள நிலையில், 95 சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு RT-PCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தமிழ்நாட்டிற்கு கூடுதலாகவே ஒன்றிய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பள்ளிகளில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்கள் எந்தவொரு இடையூறு இல்லாமல் தொடர்ந்து செயல்படும் என குறிப்பிட்டார்.

source https://news7tamil.live/minister-ma-subramaniams-important-announcement.html

சிப்காட் ஒரகடத்தில் மருத்துவ உபகரண தொழிற்பூங்கா

 தமிழ்நாட்டில், திண்டிவனம், மணப்பாறை, தேனி ஆகிய இடங்களில் உணவு பூங்காக்கள் உருவாக்கப்படும் என தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 08 2021 

சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், சிப்காட் நிறுவனத்தால் நிறுவப்பட உள்ள துறை சார்ந்த பூங்காக்களின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாட்டிலேயே முதன் முறையாக தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காவில், ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு அறைகலன் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட உள்ள இப்பூங்காவின் திட்டப்பணிகள் முடிவடைந்து வரும் டிசம்பர் மாதத்தில் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த சிப்காட் ஒரகடத்தில் மருத்துவ உபகரண தொழிற்பூங்கா 150 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் என்றும், இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில், தோல் பொருட்கள் உற்பத்திக்காக தோல் பொருள் பூங்கா, மத்திய அரசின் பெரும் தோல் காலணி மற்றும் உபகரணங்கள் தொகுப்பு (( Mega Leather Footwear Accessories Cluster )) திட்டத்தின் கீழ் 250 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் உணவு பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில், சிப்காட் நிறுவனம் முதற்கட்டமாக மணப்பாறை, திண்டிவனம் மற்றும் தேனி ஆகிய 3 இடங்களில் தலா 100 முதல் 150 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்காக்கள் அமைத்து வருவதாகவும் தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4.html

உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகள் பதவியேற்பு

 

உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 9 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 31 08 2021 

உச்ச நீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இந்த மாதத்தில் மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், நவீன் சின்காவும் ஓய்வு பெற்ற தால், 26 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது.

உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக ஒன்பது நீதிபதிகளை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதன்படி தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹீமா கோலி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஓகா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம்நாத், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி.நரசிம்மா ஆகியோர் பெயர்களை பரிந்துரைத்து.

இதை ஏற்றுக்கொண்ட மத்திய சட்ட அமைச்சகம், ஒப்புதலுக்காக குடியரசு தலைவருக்கு அனுப்பியது. அதை ஏற்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய நீதிபதிகள் நியமனத் துக்கு ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து, ஒன்பது நீதிபதிகளுக்கும் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். வரலாற்றிலேயே ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/the-new-judges-of-the-supreme-court-were-sworn-in-today.html

பள்ளி அருகே போதைப் பொருட்கள் விற்றால் கடும் தண்டனை: முதலமைச்சர்

 பள்ளி, கல்லூரி அருகே தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 31 08 2021 

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் கேள்வி நேரத்துடன் இன்று தொடங்கியது. அப்போது, பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, குட்கா, புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாகக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், போதைப் பொருள் விற்பனை முழுமையாக தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை தொடர்பாக 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11 ஆயிரத்து 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 2 ஆயிரத்து 458 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 413 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், 81 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பள்ளி கல்லூரிகள் அருகே போதை பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், போதைப் பொருள் விற்பனை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், போதைப் போருள் விற்பனையை தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு ஊக்கத் தொகை மற்றும் இதர சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

source https://news7tamil.live/severe-punishment-for-selling-gutka-near-school-colleges-cm.html

ஜெயலலிதா பல்கலை விவகாரம்: அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது

 

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து சாலையில் அமர்ந்து போராடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர் 31 08 2021 

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம், அதிமுக ஆட்சியில் அமைக்கப் பட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் இந்தப் பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் குறித்து சில நாட்களுக்கு முன் கேள்வி எழுப்பப்பட்டபோது, பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக அரசு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது என்று குறிப்பிட்டார். இதை எதிர்த்து, அப்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவை நடக்கும் கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே வாலாஜா சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப் பட்டனர்.

source https://news7tamil.live/aiadmk-mlas-arrested-for-protesting-against-merger-of-jaya-university-with-annamalai-university.html

’தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்’; 3 மாதத்திற்குள் அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 29 08 2021 மூன்று மாதத்திற்குள் ’தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்’ அமைக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களை களைவது மற்றும் மாநில அரசின் அடையாள அட்டைகள், பாஸ் மற்றும் பிற சலுகைகள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்று கூறி, ‘தமிழ்நாடு பத்திரிக்கை கவுன்சில்’ அமைக்க மாநில அரசுக்கு மூன்று மாத காலக்கெடுவை சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையிலான கவுன்சிலில் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இருப்பார்கள் என்று நீதிபதி என்.கிருபாகரன் (ஓய்வுபெற்ற பிறகு) மற்றும் நீதிபதி பி.வேல்முருகன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் உள்ள பிரஸ் கிளப்புகள் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க கவுன்சிலுக்கு முழு அதிகாரம் உள்ளது, மேலும் இது சாதி, சமூகம் அல்லது மாநில எல்லைகளின் அடிப்படையில் கிளப்புகள் அல்லது தொழிற்சங்கங்கள் அல்லது சங்கங்களை உருவாக்கவோ அல்லது தொடரவோ அனுமதிக்காது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இது தவிர, கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கங்களுக்கு தேர்தலை நடத்தி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இடைக்கால நடவடிக்கையாக, கவுன்சில் அமைக்கப்பட்டவுடன் மாநிலத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும் இடைநீக்கம் செய்யப்பட்ட அனிமேஷனில் வைக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர். கவுன்சிலின் மேற்பார்வையின் கீழ், ஆறு மாதங்களுக்குள் அந்த அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

போலி ஊடகவியலாளர்களின் அச்சுறுத்தலைக் குறைக்க, போலி பத்திரிகையாளர்களை அடையாளம் காணவும், அவர்கள் மீது, அதிகார வரம்புள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் கவுன்சிலுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

ஒரு அமைப்பு அல்லது ஊடக நிறுவனம் அவர்களின் ஊழியர்களின் எண்ணிக்கை, ஊதியம், டிடிஎஸ் விவரங்கள், அரசுக்கு செலுத்தப்பட்ட வரி விவரங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் விற்பனை அல்லது குறிப்பிட்ட பார்வையாளர்களைக் கொண்டுள்ளது என நிரூபிக்கும் வரை, பத்திரிகை ஸ்டிக்கர்கள், அடையாள அட்டைகள் மற்றும் இதர சலுகைகளை வழங்க வேண்டாம் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10,000 க்கும் குறைவான பிரதிகள் புழக்கத்தில் உள்ள நிறுவனங்களுக்கு அடையாள அட்டை மற்றும் ஊடக ஸ்டிக்கர்களை வழங்குவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

எஸ்.சேகரன் என்பவர் தொடர்ந்த பொது நல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மனுதாரர் பத்திரிக்கையாளர் என்று குறிப்பிட்டதை நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியது.

சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரியின் உத்தரவின் பேரில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதிய பெஞ்ச், பத்திரிக்கையாளர்களின் பொறுப்புக்கூறல் மற்றும் பயனுள்ள கண்காணிப்பு அமைப்பு இல்லாதது குறித்து கவலை தெரிவித்தது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/form-press-council-of-tamilnadu-in-3-months-high-court-order-to-govt-336817/

எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை வானிலை மையம் தகவல்

 கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிடுகிறது

வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை ஏற்பட வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்குக் கடலுக்குச் செல்வது பாதுகாப்பானது இல்லை என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-weather-forecast-chennai-nilgiris-rainfall-tamil-news-337034/

சீமான் பாஜகவின் பி.டீம் : காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம்

 30 08 2021 

Tamilnadu News : தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் குறித்து சர்ச்சை வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவியது. பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவரே இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்த கே.டி.ராகவன், தமிழக பாஜகவில் தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் கட்சியிலும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் என்னை பற்றி நன்றாக தெரியும். இந்த வீடியோ முழுவதும் சித்தரிக்கப்பட்டவை. இந்த பிரச்சனையை சட்டப்படி சந்திப்பபேன் தர்மம் வெல்லும் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ வெளியான யூடியூப் தளம் முடக்கப்பட்ட நிலையில், வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த இரு தினங்களில் வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தமிழக பாஜகவில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், கட்சி மேலிடம் இது தொடர்பாக என்ன நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறது என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

இந்நிலையில் இந்த சர்ச்சை வீடியோ பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கே.டி.ராகவனுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் தனது கருத்தை கூறியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ராவணன் குடி மாயோன் பெருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் கே.டி.ராகவன் சர்ச்சை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை படம் படிப்பது தவறு. உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார். சட்டசபையில் ஆபாசபடம் பார்த்தார்கள் அது தவறு ஆனால் இவர் தனது வீட்டின் அறையில் தனிப்பட்ட முறையில் செய்ததை வீடியோ எடுத்து வைத்துகொண்டு காட்டுகிறார்கள். அவரின் அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்தவரைத்தான் கைது செய்ய வேண்டும் என்று பேசிய சீமான்,  யார் யாரோடோ பேசுவதை ஒட்டு கேட்டு என்ன சாதிக்க போகிறீகள் என்று என்று கேட்டுள்ளார். சீமானின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது அறிக்கையில்,

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூக சரியாகத்தான் இருக்கிறது. பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் திரு சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது. சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இவர் இப்படிப் பொறுப்பில்லாமல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாக்குகிறார் இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது பாஜகவிடமிருந்து மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க, ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் திரு சீமான் போன்றவர்களிடமும் பெண்களும், தமிழ்சமூகமும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

இவர்கள் எல்லாம் பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, கண்ணியம் பற்றி துளிகூட கவலைப்படாதவர்கள், பெண்களை பாலியல்ரீதியான வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை ஆதரிப்பவர்கள். காலம் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குற்றங்கள், ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன அதற்காக அவையெல்லாம் சரியென்று ஆகிவிடுமா? பாலியல் குற்றவாளிகள் எல்லாம் நிரபராதிகள் ஆகிவிடுவார்களா?

எப்படி காலங்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடக்கின்றனவோ அதேபோல அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்துகொண்டுதானிருக்கிறன என்பதை திரு சீமான் நினைவில் அந்த போராட்டங்களின் பயனாகவே இன்று பெண்கள் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது வெற்றிகரமான பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள்.

பல்வேறு உளவியல், சமூக, பொருளாதாரத் தடைகளைத்தாண்டி பொதுவாழ்விற்கு வரும் பெண்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும்,பாதுகாப்புடனும் நடத்தப்படவேண்டும் அப்படியில்லாமல் பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்பவர்கள் கண்டிக்கப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும் இதுதான் ஒரு நாகரிகமான சமூகத்தின் கடமை அந்த கடமையைத் தான் தமிழ்சமூகம் சரிவர செய்துவருகிறது.

பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் அயோக்கியர்களையும், அவர்களை அப்பட்டமாக ஆதரிப்பவர்களையும் தமிழ் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இதுதான் சீமான் போன்றவர்களுக்கு உறுத்துகிறது. திரு சீமான் மீதும் கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது மேலும் சீமான் பாஜகவின் பி டீம் (B Team) என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

எப்படியிருந்தாலும் திரு. சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது. சீமான், கேடி. ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும். தமிழகம் குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களும், மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தைப் புரிந்து கொண்டு அவரைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ்ச் சமூகத்திற்கு செய்யும் பெருந்தொண்டு என்று ஜோதிமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-seeman-and-jothimani-statement-about-k-t-raghavan-337213/

தெரியாமல் தவறு நடந்திருந்தாலும் பொறுப்பு; பி.டி.ஆர் எச்சரிக்கை!

 20 08 2021 சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, உதவிப் பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு கேபி.பார்க்கில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் விரைவிலேயே சிமெண்ட் பூச்சு உதிர்ந்து விழுவது குறித்து அங்கே சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகார் எழுப்பினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் உடனடியாக பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், கட்டிடம் கட்டியதில் யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இதையடுத்து புளியந்தோப்பு கே.பி. பார்க் குடிசை மாற்று வாரிய கட்டடத்தின் உறுதித் தன்மை ஆய்வு செய்யப்படும் என்று உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, புளியந்தோப்பு கேபி.பார்க்கில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கட்டடம் தரமற்றம் முறையில் கட்டப்படதாக எழுந்த புகார் தொடர்பாக, உதவிப் பொறியாளர், உதவி நிர்வாக பொறியாளர் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “முன்னாள் அமைச்சர்களுக்கு தெரியாமல் தவறு நடந்தாலும், ஜனநாயக முறைப்படி அவர்களே பொறுப்பு. எங்கெல்லாம் தவறு நடந்து உள்ளதோ, அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய, நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, முன்னாள் அமைச்சர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும்?” என கேள்வி எழுப்பினார். மேலும், தனது துறையில், தன்னுடைய அதிகாரம் இல்லாமல் எதுவும் நடக்க கூடாது என்ற விதிமுறை தீவிரமாக பின்பற்றி வருவதாகக் கூறினார்.

முன்னதாக, மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக, நேற்று (ஆகஸ் 29) கருத்து தெரிவித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் முறையாக ஆய்வு செய்யப்படாமல், முறையாக பராமரிக்கப்படாமல் பயன்படுத்தி உள்ளனர். இது விபத்துக்கு முக்கிய காரணம். அதேபோல் இந்த பாலத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் முறையாக பயிற்சி பெறவில்லை. ஊழியர்களுக்கு எப்படி இயந்திரங்களை இயக்க வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்படவில்லை.

இதுவும் விபத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. பாலத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மேற்கொண்டு முடிவு எடுப்பார். இது தொடர்பாக விசாரணை நடக்க உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மூலம் பாலம் கட்டும் ஒப்பந்ததாரரிடம் எங்கே தவறு நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-ptr-palanivel-thiagarajan-warning-to-former-minister-of-aiadmk-337255/

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உறுதி:

 30 08 2021 திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டம் சூசகமாக தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கையில் உறுதிய அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டுவருகிறது. அதில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று குடும்பத் தலைவிகள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சட்டப் பேரவையில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார். ஆனால், முதலமைச்சர் இது பற்றி எதும் அறிவிக்கவில்லை. இதனிடையே, அதிமுகவினர், திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விமர்சனம் வைத்து வருகின்றனர்.


இந்த சூழலில்தான், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டம் உறுதியாக நடைமுறைப்படுத்தபப்டும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ் 29ம் தேதி கொளத்தூர், எவர்வின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சியை முடித்த 353 மகளிருக்கு சான்றிதழ்களையும், தையல் இயந்திரங்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நான் பேசுவதாக வரவில்லை. ஆனால், நீங்களெல்லாரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவும் என்னுடைய குரலைக் கேட்க வேண்டும், அவரைப் பேசச் சொல்லுங்கள் என்று நீங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகள் மட்டும் உங்களிடத்தில் பேச விரும்புகிறேன்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் சார்பில் தையல் பயிற்சி கொடுத்து, அதனால் ஆயிரம் பேருக்கும் மேல் பயனடையக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. பெண்களுடைய முன்னேற்றத்திற்கு, மகளிருடைய வாழ்விற்கு எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ சாதனைகளை
இப்போது ஆட்சிக்கு வந்து மட்டுமல்ல, தொடர்ந்து கலைஞருடைய காலத்தில் 5 முறை ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோதும் இப்போது ஆறாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய கழக ஆட்சியின் சார்பில் பல திட்டங்களை தீட்டி நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.

பெண்களுடைய முன்னேற்றம்தான் இந்த நாட்டினுடைய முன்னேற்றம். பெண்களுடைய முன்னேற்றம்தான் முக்கியம் என்று கருதி, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இடஒதுக்கீடு, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்திருக்கும் பெண்ணுக்கு திருமணம் என்றால், அந்தப் பெண்ணினுடைய திருமணச் செலவிற்கு நிதி வழங்கிய ஆட்சிதான் கலைஞருடைய ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும்.

தேர்தல் நேரத்தில் பல உறுதிமொழிகளைச் சொல்லியிருக்கிறோம். அதில் எதையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம். எதையெல்லாம் நிறைவேற்றப் போகிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது இலவசமாக பயணம் செய்யலாம். இங்கே கூட இந்த சான்றிதழ்களை வாங்க வந்த சகோதரிகளும், தாய்மார்களும் ரொம்ப நன்றி, ரொம்ப நன்றி, நாங்களெல்லாம் பேருந்தில் இலவசமாக சென்றுகொண்டிருக்கிறோம் என்று சொன்னீர்கள்.

அதேபோல், பெண்கள், நீங்களெல்லாம் தன்மானத்தோடு, சுயமரியாதை உணர்வோடு இருக்கவேண்டும். யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் 1989ம் ஆண்டு தர்மபுரியில், தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, மகளிர் சுயஉதவிக் குழு என்கிற ஒரு அற்புதமான திட்டத்தை உருவாக்கித் தந்தார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது நான் முதலமைச்சராக பொறுப்பில் இருக்கிறேனென்றால், இன்று இங்கு வந்திருக்கக்கூடிய சேகர்பாபுவாக இருந்தாலும் சரி, செந்தில் பாலாஜியாக இருந்தாலும் சரி, நாங்களெல்லாம் அமைச்சர்களாக இன்றைக்கு இருக்கிறோமென்றால் அதற்கு காரணம் இந்த ஆட்சியை உருவாக்கித் தந்தவர்ககள் நீங்கள்தான்; தமிழ்நாட்டு மக்கள்தான் காரணம்.

இப்படி பெண்களுடைய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உறுதியாக இந்த ஆட்சி பணியாற்றும்; தேர்தல் நேரத்தில் தந்திருக்கக்கூடிய உறுதிமொழிகளையெல்லாம் நிச்சயம் நிறைவேற்றும் என்ற உறுதியை மீண்டும் உங்களுக்கு எடுத்துச்சொல்லி, இன்றைக்கு சான்றிதழை பெற்றிருக்கக்கூடிய நீங்கள் மகிழ்ச்சியோடு அதை வாங்கியிருக்கிறீர்கள். அந்த மகிழ்ச்சி தொடரவேண்டும், அது தொடர்வதற்கான எல்லா முயற்சிகளையும் திமுக ஆட்சி மேற்கொள்ளும் என்ற உறுதியைச் சொல்லி, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், வணக்கத்தையும் சொல்லி என் உரையை முடிக்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-hints-to-the-amount-of-incentives-for-women-as-family-heads-337288/

இந்தியாவில் இப்படி ஒரு நதியா? மலைகளின் நடுவே தவழ்ந்து செல்லும் தீஸ்தா நதி

 இந்தியா இயற்கை வளங்களில் மற்ற நாடுகளை விஞ்சி விடும் அளவிற்கு செழிப்பாகவும் வளமையாகவும் இருக்கிறது. ஆனாலும் என்னவென்றால், பல்வேறு தேவைகளுக்காக காடுகள் வெட்டப்பட்டும், மலைகள் குடையப்பட்டும் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த செம்மையை நாம் இழந்து வருகிறோம்.

. 315 கி.மீ நீளம் கொண்டுள்ள இந்த நதியானது கிழக்கு இமயமலைகளில் உருவாகி, சிக்கிம், மேற்கு வங்கம் வழியே பயணித்து, வங்கதேசத்திற்குள் நுழைகிறது. 12,370 சதுரை கிமீ பாசனத்திற்கு உதவும் இந்த நதியானது இறுதியாக வங்கக் கடலில் சங்கமிக்கிறது.

இரண்டு மலைகளை இணைக்கும் ஒரு பாலம், அதன் கீழே அமைதியாக வெகு தூரம் பயணித்து பார்வைக்கு அப்பால் எங்கோ சென்று மறைந்துவிடுகிறது அந்த நதி.

source IndianExpress,  Twitter/Parveen Kaswan

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

சுதந்திர தின கொண்டாட்ட போஸ்டரில் நேருவை தவிர்த்த ICHR; ப.சிதம்பரம் கடும் விமர்சனம்

 exclusion of Nehru's image, Azaadi ka Amrit Mahotsav celebrations, நேரு படத்தை தவிர்த்த ஐசிஎச்ஆர், சுதந்திர தின கொண்டாட்ட போஸ்டர், டிஜிட்டல் போஸ்ட்டரில் நேருவை தவித்த ஐசிஎச்ஆர், ப சிதம்பரம் கடும் விமர்சனம், exculuding nehru image ICHR triggered controversy, p chidambaram criticise ichr, ichr, p chidambaram slams ICHR

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போஸ்டரில் ஜவஹர்லால் நேருவை தவிர்த்ததற்காக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சந்தித்த இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR) இந்த பிரச்சனை சர்ச்சை தேவையற்றது என்று கூறியுள்ளது. வரும் நாட்களில் வெளியிடப்படும் மற்ற போஸ்டர்களில் நேரு படம் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளது.

“இந்த இயக்கத்தில் யாருடைய பங்கையும் குறைத்து மதிப்பிடுவதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை” என்று ஒரு இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த பிரச்சினையில் விமர்சனத்தை நிராகரித்த அவர், ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட போஸ்டரில் இதுவும் ஒன்றாகும் என்று கூறினார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முதல் டிஜிட்டல் போஸ்டரில் ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தை தவிர்த்ததற்காக இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில்லை காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை கண்டித்தார்.

இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் (ICHR) உறுப்பினர் செயலாளர் வெறுப்பு மற்றும் தவறான எண்ணங்களுக்கு தலைவணங்குவதாக குற்றம் சாட்டினார். மேலும், அவர், மோட்டார் கார் கண்டுபிடித்ததைக் கொண்டாடும் போது ஹென்றி ஃபோர்டை தவிர்ப்பாரா அல்லது விமானப் பயணத்தைக் கொண்டாடும் போது ரைட் சகோதரர்களை புறக்கணிக்க முடியுமா என்று கேட்டார்.

மோட்டார் காரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஹென்றி ஃபோர்டு . உலகின் முதல் விமானத்தை உருவாக்கி பறக்க விட்டவர்கள் ரைட் சகோதரர்கள் ஆவர்.

“சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் முதல் டிஜிட்டல் போஸ்டரில் ஜவஹர்லால் நேருவை நீக்கியதற்கு இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் உறுப்பினர் – செயலாளர் அளித்துள்ள் விளக்கம் நகைப்புக்குரியது” என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறினார்.

மேலும், “தப்பெண்ணம் மற்றும் வெறுப்புக்கு அடிபணிந்த பிறகு, உறுப்பினர் – செயலாளர் வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது” என்று அவர் கூறினார்.

“அவர் மோட்டார் கார் கண்டுபிடிப்பைக் கொண்டாடினால், அவர் ஹென்றி ஃபோர்டைத் தவிர்ப்பாரா? அவர் விமானப் பயணத்தின் பிறந்த நாளைக் கொண்டாடினால், அவர் ரைட் சகோதரர்களைத் தவிர்ப்பாரா? அவர் இந்திய அறிவியலைக் கொண்டாடினால், அவர் சர் சி.வி. ராமனைத் தவிர்ப்பாரா?” என்று சிதம்பரம் தொடர்ச்சியான ட்வீட்களில் கேள்வி எழுப்பினார்.

இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் ‘ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்’ கொண்டாட்டத்தின் போஸ்டரில் இருந்து நேருவின் உருவப்படம் விலக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் அதற்காக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து இது அல்பமான கொடுமை” என்று கூறினர்.

source https://tamil.indianexpress.com/india/p-chidambaram-criticise-on-ichr-for-omitting-jawaharlal-nehru-in-poster-indipendence-336975/

5 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்த நடவடிக்கை:

 தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று (ஆக.27) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய திருவையாறு தொகுதி திமுக உறுப்பினர் துரைசந்திரசேகர், ‘‘தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை கடந்து வருவதில் அவமானம் ஏற்படுகிறது. வாகனத்தில் எம்எல்ஏ இருக்கிறாரா, பாஸ் உள்ளதா என்பதை ஆய்வு செய்கின்றனர். நீண்ட நேரம் அனைவரையும் காக்க வைக்கின்றனர். எனவே, மத்திய அரசிடம் பேசி இந்த சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, “
சென்னைக்கு அருகிலுள்ள 5 சுங்கச்சாவடிகளைக் கடக்க அதிக நேரம் எடுக்கும் என்பது உண்மைதான், இவை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இயங்கி வரும் 48 சுங்கச்சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் சென்னையை சுற்றியுள்ள பரனூர், நெம்மேலி, சென்னசமுத்திரம், சூரப்பட்டு மற்றும் வானகரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் அவரை நேரில் சந்தித்து பேசவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த முயற்சிகளை அரசு செய்யும்‘‘ என்றார்.

OMR சாலையில் ஆக.30ஆம் தேதி முதல் சுங்கக் கட்டண வசூல் நிறுத்தம்:

தொடர்ந்து சில அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் எ.வ.வேலு, ஆகஸ்ட் 30 முதல் சென்னை ஓஎம்ஆர் (OMR) சாலையில் பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் ஆகிய சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்படும் என தெரிவித்தார். மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதை முன்னிட்டு சுங்கக் கட்டண வசூல் நிறுத்தம் செய்யப்படுதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-city-tamil-news-tn-govt-will-shutdown-5-tollgate-near-city-336605/