இந்த ஊரடங்கில் பல குழந்தைகளும் இளைஞர்களும் முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்போது அதிகமான நேரத்தை ஆன்லைனில் செலவிடுகிறார்கள். ஆன்லைன் வழி கல்வி பயனளித்தாலும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று கூற முடியாத நிலையே நீடித்து வருகிறது. இந்த சூழல் எப்போது இயல்பு நிலைக்கு மாறும் என்று தெரியவில்லை. அதோடு கருப்பு பகுதியான Dark web குறித்தும் வெளிக்காட்டியுள்ளது. தற்போது கூகுள் நிறுவனம் 18 வயது கீழே இருப்போருக்கு அவரது பாதுகாப்பிற்காக சில விதிகளைக் கொண்டு வந்துள்ளது.
கூகுள் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் பாதுகாப்பை வழங்க பல திட்டங்களை மேற்கொள்கிறது. இவை 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கிறது. இதனால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும் என்று உறுதியாக கூறுகிறது.
18 வயதுக்கு உள்ளவர்களுக்கு எப்படி கட்டுப்பாடு விதிக்கிறது
கூகுள் நிறுவனம் அறிவிப்பின்படி 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் தேடுதல் பட்டியலில் அவர்களுடைய புகைப்படத்தை நீக்க முடியும். இதனால் ஆன்லைனில் அடையாளத்தை வெளிப்படுத்தாது.
கூகுள் நிறுவனம் சிறியவர்களுக்குத் தனது தயாரிப்பினை புதுப்பிக்கிறது.
18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் தனது யூடியூப் கணக்கில் ஏதேனும் பதிவிட்டால் அவை இயல்பாகவே தனியார் பதிவாக மாறிடும். இதைப் போலவே யூடியூப் வேறு சிலவற்றையும் உள்ளடக்கப் போகிறது. இதனால் சில பாடப்பொருளையும் இதன் மூலம் கற்றுத் தரலாம்.
கூகுளில் இயல்பாகவே safe search 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு செயல்படும். ஆனால், தற்போதைய நிலையில் 13 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இவை பள்ளியின் சார்ந்த கூகுள் கணக்குகளுக்கு இயல்பாகவே செயலில் இருக்கும்.
கூகுள் அசிஸ்டென்ட் மூலம் சிறிய வயதினரை சில இணையத்தளங்களிலிருந்து தடுக்கும்.
அது மட்டுமில்லாமல் 13வயதுக்கு கீழே உள்ளவர்கள் இடத்தின் விவரத்தில் மற்றவர் அறிய முடியாது.
சில செயலிகளுக்கு கூகுள் நிறுவனம் பெற்றோர்களுக்கு சில விதிக்கப்பட்ட கொள்கைகளை வலியுறுத்தி பிள்ளைகளுக்கும் பாதுகாப்பானவை என்ற எளிதில் முடிவினை மேற்கொள்ள வைக்கிறது.
18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு உணர்ச்சியை ஏற்படுத்தும் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனால், விளம்பரதாரர்கள் தங்களின் இலக்கினை கொண்டு சேர்க்க முடியாது. அத்துடன் பயனாளர்களுக்கு தேவையான செய்தியை மட்டுமே தருகிறது. எளிதில் புரிந்துக் கொள்ளும் பொருளையே தருகிறது.
கூகுள் இதை எதற்காக செய்கிறது?
சில பெரிய நிறுவனங்கள் 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் கட்டாயத்தில் இருக்கின்றன. 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவில் “ குழந்தைகள் இணைய தனியுரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி (Children’s Online Privacy Protection Act) “18 வயதுக்கு கீழே உள்ளவர்களை சில தவறான இணையதளங்களிலிருந்து தவிர்க்கிறது. தற்செயலாக 2019ல் இந்த சட்டத்தை மீறியதற்காக பெற்றோரின் அனுமதியின்றி குழந்தைகளின் விவரத்தை சேகரித்தற்காகவும் கூகுள் நிறுவனம் 170 கோடி அபராதம் செலுத்தியது.
பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் உடன் இணைந்ததால் தற்போதைய இளைஞர்களுக்கேற்ப சில அம்சங்களை 18 வயதுக்கேற்ப மாற்றியுள்ளனர். கூகுளைப் போலவே இன்ஸ்டாகிராமில் சில விளம்பரங்கள் மற்றும் சில செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
source https://tamil.indianexpress.com/explained/google-will-offer-more-protection-to-children-online-332749/