Shubhajit Roy
15 08 2021 Taliban take Kabul : காபூல், அனைத்து ஆப்கான் போர்களிலும் இறுதி பரிசு, ஞாயிற்றுக் கிழமை அன்று தாலிபான் வசம் வந்தது. அமெரிக்க துருப்புகள் அவசரமாக திரும்ப பெறப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, போர் வீரர்கள் சண்டையை கைவிட்ட நிலையில், ஒரு வெளிப்படையான தாக்குதலில் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
அதிபர் அஷ்ரஃப் கானி, பாகிஸ்தானால் ஆதரிக்கப்பட்ட தாலிபான் படையினர் காபூலின் எல்லைப் பகுதியில் நடமாடுவது துவங்கிய பிறகு நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களின் தலைவர்கள் ரத்த சேதங்களை தவிர்க்க அதிகாரத்தை மாற்றித் தருமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
9/11 தாக்குதலுக்கு பிறகு நகரை விட்டு வெளியேறி 20 வருடங்கள் ஆன நிலையில், தாலிபான்கள் மீண்டும் காபூலில் கால் வைத்திருப்பது இதுவே முதல்முறை. அவர்கள் காபூலை இதற்கு முன்பு 1996ம் ஆண்டு கைப்பற்றினார்கள். இரவில் தாமதமாக எஸ்.யூ.விக்களில் காபூலின் மைய பகுதிகளில் வட்டமடித்து தங்களின் வெற்றியை கொண்டாடினார்கள்.
ஆப்கானிஸ்தான் தேசிய நல்லிணக்க கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா கானியின் வெளியேற்றத்தை உறுதிப்படுத்தியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆஃப்கான் முன்னாள் அதிபர், இப்படியான இக்கட்டான சூழலில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடவுள் இவரின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வைப்பார் என்றும் கூறியுள்ளார்.
மசார்-இ-ஷெரீப் சனிக்கிழமை மாலை வீழ்ந்தபின் காபூல் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பெரிய நகரம் ஆகும். ஞாயிற்றுக்கிழமை அன்று காபூலின் எல்லையோரப் பகுதிகளில் தாலிபான்களின் நடமாட்டம் காணப்பட்ட போதே அந்த நகரின் விதி தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
அவர்களின் வருகை காட்டுத்தீ போல பரவ, நகரம் பீதிக்குள்ளானது. எல்லா இடங்களிலும் போக்குவரத்து நெரிசல்கள் காணப்பட்டது. மக்க்கள் வங்கிகளில் இருந்து பணம் எடுத்துக் கொண்டனர். வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் வாங்க துவங்கினார்கள்.
பிற்பகலுக்குள், நகரத்தின் வீழ்ச்சி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ முடிந்தது. அனைத்து முக்கிய அலுவலகங்கள் மற்றும் தூதரகங்கள் அமைந்துள்ள டவுன்டவுன் பகுதிகளின் வீதிகள் காலியாகி அப்பகுதியின் மேலே அதிக அளவில் ஹெலிகாப்டர்கள் பறக்க துவங்கின.
அமெரிக்க தூதரகத்தில் இருந்து முக்கிய அதிகாரிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டார்கள். அந்த வளாகத்தில் எழுந்த புகை, முக்கிய ஆவணங்கள் மற்றும் கருவிகளை அழித்ததன் அடையாளமாக உணரப்படுகிறது. வெளியேற்றப்பட்டவர்களில் அமெரிக்க தூதரும் ஒருவர். பல வெளிநாட்டு தூதரகங்களும் வெளியேறும் திட்டங்களை கொண்டுள்ளன.
முக்கிய வடக்கு நகரான மசார்-இ-ஷெரீப்பை சனிக்கிழமை இரவு கைப்பற்றிய பின்னர் தலிபான்கள் காபூல் மற்றும் அதன் அருகிலுள்ள பிற நகரங்கள் மற்றும் நகரங்களை கைப்பற்றினார்கள்.
ஞாயிற்றுக்கிழமை அன்று தாலிபான்கள் பக்ராம் விமானப்படைத் தளத்தில் வீரர்கள் சரணடைந்த பின்னர் அதனை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். நூற்றுக்கணக்கான தாலிபான்கள் மற்றும் ஐ.எஸ். உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு வைத்திருந்த சிறையையும் அவர்கள் கைப்பற்றினார்கள். கிழக்கில் அவர்களின் கைகளுக்குள் வந்த நகரங்களுள் ஜலாபாத்தும் ஒன்று. மாலையில், ஆப்கானிஸ்தானின் படைகள் மற்றும் ஆட்சியின் அழிவு முடிந்தது.
source https://tamil.indianexpress.com/international/taliban-take-kabul-president-ashraf-ghani-flees-america-absconds-332772/