திங்கள், 9 ஆகஸ்ட், 2021

இன்று வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார் நிதியமைச்சர் பிடிஆர்

 09 08 2021 

தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிடவுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின் போது, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிடுவதாக அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள், எந்தெந்த வழிகளில் அவை செலவிடப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

120 பக்கங்கள் கொண்ட அறிக்கை என வெளியிடப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி கூட உள்ள நிலையில், இன்று வெளியிடப்படும் நிதிநிலை வெள்ளை அறிக்கை சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் கடுமையான விவாதங்களை கிளப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

source https://news7tamil.live/fm-ptr-release-white-paper-on-tn-finances.html