உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைகளைச் செயல்படுத்தாமல் மத்திய அரசு தாமதிக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதியாக மோக்ஷா கஜூரியா-காஸ்மியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்த நிலையில் மத்திய அரசு மறுத்துவிட்டது. இரண்டு ஆண்டுகளில் ஜம்மு -காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் பதவி குறித்த கொலீஜியத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு திருப்பி அனுப்புவது இது நான்காவது முறையாகும்.
கடந்த 2019ஆம் ஆண்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜீயம் ஜம்மு & காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக கஜூரியா-காஸ்மி மற்றும் ராஜ்னேஷ் ஓஸ்வால் ஆகிய இரு வழக்கறிஞர்களை நியமிக்க பரிந்துரைத்தது. ஏப்ரல் 2020 இல் நீதிபதியாக வந்த ஓஸ்வாலை அரசாங்கம் அனுமதித்தபோது, காஸ்மியின் கோப்பு நிலுவையில் இருந்தது.
கடந்த மாதம், சட்ட அமைச்சகம் கஜூரியா-காஸ்மியின் கோப்புகளை உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு எந்த காரணமும் தெரிவிக்காமல் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பியதாக இந்தியன் எக்ஸ்பிரசுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
கஜூரியா-காஸ்மி ஒரு மூத்த வழக்கறிஞர். 2016ல் கவர்னர் ஆட்சியின் போது கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றினார், பின்னர் மெஹபூபா முப்தி தலைமையிலான பிடிபி-பிஜேபி அரசாங்கத்தில் பணியாற்றியுள்ளார்.
மார்ச் 2019 ல், அப்போதைய தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரைத்த கஜூரியா-காஸ்மி, ஓஸ்வால், ஜாவித் இக்பால் வானி, ராகுல் பாரதி ஆகிய நான்கு நீதிபதிகளின் நியமன செயல்முறையைத் தொடங்கியது:
2019ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி உச்சநீதிமன்ற கொலீஜியம் முதலில் கஜூரியா-காஸ்மி மற்றும் ஓஸ்வால் பரிந்துரைகளை எடுத்தது,. அதைத் தொடர்ந்து ஜனவரி 22, 2019 அன்று வானி மற்றும் மார்ச் 2, 2021 அன்று ராகுல் பாரதியை பரிந்துரைத்தது.
வானி ஜூன் 2020 ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் பாரதியின் கோப்பு மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், கஜூரியா-காஸ்மி, நீதிபதிகள் வினோத் கோல், சஞ்சய் தார் மற்றும் புனித் குப்தா ஆகியோருக்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்ட மற்ற மூன்று நீதித்துறை அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் மூன்று பரிந்துரைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. வழக்கறிஞர்கள் வாசிம் சாதிக் நர்கல், நசீர் அகமது பேக், ஷோகட் அகமது மக்ரூ ஆகியோரது பரிந்துரைகள் திருப்பி அனுப்பப்பட்டது.
ஏப்ரல் 2018 இல், அப்போதைய நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் J செலமேஸ்வர் மற்றும் கோகோய் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் குழு உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு வழக்கறிஞர்கள் மற்றும் ஒரு நீதித்துறை அதிகாரியை பரிந்துரைத்தது
நர்கல், பேக் மற்றும் மக்ரூ தவிர, கொலீஜியம் வழக்கறிஞர் சிந்து சர்மா மற்றும் நீதித்துறை அதிகாரி ரஷித் அலி தார் ஆகியோரை பரிந்துரைத்தது. தார் மற்றும் சர்மா நீதிபதிகளாக நியமிக்கப்பட்டபோது, மற்ற மூன்று உறுப்பினர்களின் கோப்புகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியது
இருப்பினும், 2019 ஜனவரியில், தலைமை நீதிபதி கோகோய் தலைமையிலான கொலீஜியம், ஜம்மு -காஷ்மீரின் முன்னாள் மூத்த கூடுதல் அட்வகேட் ஜெனரலான நர்கலின் பரிந்துரையை ஒத்திவைத்தது, மேலும் சட்ட அமைச்சகத்திடம் “குறிப்பிட்ட பரிந்துரையின் அடிப்படையில் விரிவான தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டது. ஸ்ரீ நர்கல் கொலீஜியத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்டது,
நடைமுறையின்படி, ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிப்பதற்கான முன்மொழிவு ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் தொடங்கப்பட்டது. தலைமை நீதிபதியின் முன்மொழிவு ஆளுநருக்கு அனுப்பப்படும். மேலும் இந்திய தலைமை நீதிபதி மற்றும் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சருக்கும் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டது.
ஆளுநரின் பரிந்துரை மற்றும் உளவுத்துறை அறிக்கைகள் உட்பட முழுமையான தகவல்கள் சட்ட அமைச்சகத்தால் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் முன் வைக்கப்படுகிறது, இது நீதிபதிகளை நியமிப்பதற்காக ஜனாதிபதியிடம் பரிந்துரைகளை வழங்குவதற்கான இறுதி முடிவை எடுக்கிறது.
13 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 4 கூடுதல் நீதிபதிகள் உட்பட 17 நீதிபதிகளைக் கொண்ட ஜம்மு -காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் தற்போது 11 நீதிபதிகள் உள்ளனர்.
ஏப்ரல் 2021 இல், தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே, நீதிபதிகள் SK கவுல் மற்றும் சூர்யா காந்த் ஆகியோரின் உச்ச நீதிமன்ற பெஞ்ச், தனது கொலீஜியம் பரிந்துரைகளை திரும்பப் பெறுவதில் மத்திய அரசின் தாமதம் “கவலைக்குரிய விஷயம்” என்று கூறியது. மோக்ஷா கஜூரியா-கஸ்மி ஆகியோரின் பெயர்கள் முன்மொழிவு செய்து கிட்டத்தட்ட 22 மாதங்களுக்குப் பரிந்துரை மறுக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/centre-rejects-collegium-name-for-judge-in-jk-332431/