செவ்வாய், 14 செப்டம்பர், 2021

5,570 போராட்ட வழக்குகள் ரத்து; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு 14 09 2021


குடியுரிமை திருத்தச் சட்டம், 8 வழிச்சாலை உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திமுக ஆட்சி அமைத்த பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்‌ சட்டத்திருத்த மசோதா மற்றும்‌ சட்டத்திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள்‌, விவசாய அமைப்புகள்‌ மீது போடப்பட்ட வழக்குகள்‌ ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை  வெளியிட்டுள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம், 8 வழிச்சாலை உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளும் ரத்து எனக் கூறப்பட்டுள்ளது. மேலும்,  பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்குகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் என மொத்தம் 5,570 வழக்குகளையும் ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/cancellation-of-protest-cases-government-of-tamil-nadu.html