மானாமதுரை அருகே நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும், காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிக்கும் இடை யே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த சம்பவத்தின்போது பதிவு செய்யப்ப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை (செப்டம்பர் 11) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிவேலு, மானாமதுரையில் காங்கிரஸ் வளரவில்லை. அதர்கு தற்போதுள்ள நிர்வாகிகள்தான் காரணம். அதனால், அவர்களை மாற்ற வேண்டும். அவர்கள் காங்கிரஸ் கட்சி மாவட்ட, வட்டார நிர்வாகிகளை கூட்டத்துக்கு அழைப்பதில்லை. பூத் கமிட்டியை முறையாக அமைக்கவில்லை என்று விமர்சித்து பேசினார்.
ஆனால், கூட்டத்தில் பாண்டிவேலு தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், பாண்டிவேலு தொடர்ந்து பேசியதால், கோபமடைந்த ப.சிதம்பரம் மேடையில் இருந்து இறங்கி வந்து, பாண்டிவேலுவை மேடையில் அமர்ந்து பேசுமாறு கூறுகிறார். மேலும், தான் பாண்டிவேலு இடத்தில் அமர்ந்து பேசுவதைக் கேட்பதாகவும் கூறுகிறார். இதனால், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிவேலுவுக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. இதையடுத்து, அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் பாண்டிவேலுவை சமாதானப்படுத்தினர்.
மானமதுரை அருகே முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிவேலுவுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தின்போது பதிவு செய்யப்பட்ட விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் புகார் தெரிவிப்பேன் என்று பாண்டிவேலு கூறியதற்கு ப.சிதம்பரமும் கூறியதாக ஊடகங்களிடம் பாண்டிவேலு தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/congress-senior-leader-p-chidambaram-and-congress-district-functionary-faceoff-340980/