ஞாயிறு, 31 அக்டோபர், 2021

பெரியாறு அணையில் தண்ணீர் திறந்த கேரள அமைச்சர்கள்: தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

 30 10 2021  தமிழக அரசின் பராமரிப்பில், கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பல ஆண்டுகளாக இரு மாநிலத்திற்கும் இடையேயான பிரச்சனை மையமாக இருந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 142 அடி ஆக இருக்க வேண்டும் என 2006 மற்றும் 2014ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்குள், கேரள அமைச்சர்கள் முன்னிலையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.வடகிழக்கு பருவ மழையால்...

நீட் பீதியில் மேலும் ஒரு மாணவர் மரணம்; ஸ்டாலின் இதைச் செய்து ஆகணும்: அன்புமணி

 30 10 2021 நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ், கனிமொழி, மற்றும் சௌந்தர்யா ஆகிய மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவர் கீர்த்திவாசன். நன்றாக படிக்க கூடிய இந்த மாணவர் கடந்த 2 வருடங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார்....

உங்கள் ஊருக்கான சார் பதிவாளர் அலுவலகம் மாறும் வாய்ப்பு: தமிழக அரசு புதிய அரசாணை

 30 10 2021 தமிழகத்தில் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்களை ஒரே எல்லைக்குள் கொண்டு வரும் வகையில், சார்பதிவாளர் அலுவலக எல்லைகளை மறுவரையறை செய்ய தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ள நிலையில், இது தொடர்பாக. பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில்,சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பதிவுத்துறை மானியக்கோரிக்கையின் போது, பதிவுத்துறையில்...

தமிழ்நாடு நாள் தேதி நவ. 1-ல் இருந்து ஜூலை 18-க்கு மாற்றம்: காரணத்தை விளக்கி அரசு அறிக்கை

 30 10 2021 நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இனி ஜூலை 18 ஆம் நாளே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், எல்லைப் போராட்ட வீரர்களுக்கு தலா ரூ.1லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள், இந்தியா முழுவதும்...

திமுக- பாமக திடீர் கூட்டணி: நெமிலியில் அதிமுக ஷாக்

 30 10 2021 ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி ஒன்றியத் தலைவர் பதவியை, பாமகவுடன் கூட்டணி அமைத்து, திமுக முதல் முறையாகக் கைப்பற்றியுள்ளது. இதில் பாமக துணைத் தலைவர் பதவியைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த, மறைமுகத் தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை.நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 19 வார்டுகளில் திமுக 8, பாமக 5, அதிமுக 4, சுயேச்சைகள் இருவர் வெற்றி...

துணைவேந்தர்கள்- துறை செயலாளர்களுடன் ஆளுநர் முதல்முறையாக ஆலோசனை: பேசியது என்ன?

 31 10 2021 சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சி இதழ்களில் தரமான ஆய்வுகள் மற்றும் வெளியீடுகளின் அவசியத்தை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனான கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.தமிழக பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் தொடர்பாக, பல்கலைக்கழகங்களின் வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி, நேற்று (அக்டோபர் 30) துணைவேந்தர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற...

போலீஸ் வாகனத்தின் மீது இளைஞர்கள் குத்தாட்டம்… தேவர் விழாவில் விதிமீறல்

 30 10 2021 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற்றதுஇந்நிலையில் நேற்று, பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதே போல, பொதுமக்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை...

பார்களுக்கு வருவோரின் விவரம் சேகரிப்பு… வழிகாட்டு நெறிமுறையில் என்னென்ன கட்டுப்பாடுகள்?

 31 10 2021 தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பார்களில் அமர்ந்து மது அருந்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் பார்களை நாளை (நவம்பர் 1) முதல் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.மாநிலம் முழுவதும் செயல்படும் 5425 மதுபானக்கடைகள், அங்கு இயங்கிவரும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்களும் திறக்கப்படுகின்றன.இந்நிலையில்,...

சனி, 30 அக்டோபர், 2021

வீட்டுக் கடனுக்கு மத்திய அரசு மானியம் இவ்ளோ பெரிய தொகை… இதை ஏன் மிஸ் பண்றீங்க?

 How to get a home loan subsidy under the Pradhan Mantri Awas Yojana Scheme Tamil News : எந்தவொரு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் பட்டியலைச் சரிபார்க்கும் முன்பும், அந்தத் திட்டத்தின் முக்கிய கொள்கைகளை நன்கு புரிந்துகொள்வது அவசியம். PMAY (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா)-ஜி (கிராமின்), அனைவருக்கும் வீடு என்ற அரசாங்கத்தின் திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது. 2022-ம் ஆண்டிற்குள் இந்தத் திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்த...