weather forecast for next 24 hours : வடகிழக்கு பருவமழை இன்னும் இரண்டு நாட்களில் துவங்க உள்ள நிலையில் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
வேலுர், ராணிப்பேட்டை. திருவள்ளூர், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர், நாமகல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான கனமழை பெய்யும் என்று எதிர்பார்கப்படுகிறது. கோவையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
Chennai Weather
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பதிவான மழையின் அளவு
திருப்பூர் மாவட்டம் அமராவதியில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
செஞ்சி, அரவக்குறிச்சி, திருமூர்த்தி அணை ஆகிய பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், குமரியின் கன்னிமார், திருப்பூர் மாவட்டத்தின் மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தேனியின் வீரபாண்டி, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், அரியலூர் மாவட்டம், கரூரின் பரமத்தி, திண்டுக்கலின் வேடசந்தூர் மற்றும் கடலூர் கொத்தவசேரி ஆகிய பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-weather-updates-chennai-rains-imd-rmc-weather-forecast-for-next-24-hours/