அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான (என்.ஆர்.ஐ.) தர்ஷன் சிங் தலிவால், அக்டோபர் 23-24 இரவு டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்காக லங்கார் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு தண்டனையாக அவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட என்.ஆர்.ஐ தர்ஷன் சிங் தலிவால் யார்?
தலிவாலின் இளைய சகோதரர் சுர்ஜித் சிங் ரக்ரா கூறுகையில், மூன்று பண்ணை சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு உதவுவதை நிறுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் தலிவாலை கேட்டுக் கொண்டனர்.
அமெரிக்காவில் வசிக்கும் என்.ஆர்.ஐ., தர்ஷன் சிங் தலிவால், அக்டோபர் 23-24 இரவு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லி எல்லைகளில் விவசாயிகளை போராட்டம் நடத்துவதற்காக லங்கார் ஏற்பாடு செய்ததற்கு தண்டனையாக” திருப்பி அனுப்பப்பட்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கோரிக்கை விடுத்துள்ளார்.
யார் இந்த தர்ஷன் சிங் தலிவால்?
அமெரிக்காவில் வசிக்கும் 71 வயதான வெளிநாடு வாழ் இந்தியரான இவர் பாட்டியாலாவுக்கு அருகில் உள்ள ரக்ரா கிராமத்தைச் சேர்ந்தவர். தர்ஷன் சிங் தலிவால் தனது 21வது வயதில் 1972ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். தற்போது தலிவால் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் பம்புகள் மற்றும் எரிவாயு நிலையங்களை வைத்துள்ளார். அவரது இளைய சகோதரர் சுர்ஜித் சிங் ரக்ராவின் கூறுகையில், முந்தைய SAD அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர் – தலிவால் 2004ல் சுனாமியால் பாதிப்பு ஏற்பட்டபோது தமிழகத்திற்கு நிவாரணப் பொருட்களை வழங்கியதோடு சுகாதார ஊழியர்களின் குழுவையும் அனுப்பினார்.
அமெரிக்காவின் விஸ்கான்சின், லேக் மிச்சிகனில் தலிவால் ஒரு கால்பந்து மைதானத்தை உருவாக்க 1 மில்லியன் டாலரை நன்கொடையாக அளித்தார். மேலும், விஸ்கான்சின் பல்கலைக்கழகத்திற்கு தொடர்ந்து நன்கொடையாளராக இருந்து வருகிறார். அந்த பல்கலைக்கழகத்தில் அவருடைய தந்தை பாபு சுபேதார் கர்தார் சிங் ரக்ராவின் பெயரில் ஒரு இருக்கை நிறுவப்பட்டுள்ளது. தலிவால் விஸ்கான்சினில் மகாத்மா காந்தியின் சிலையையும் நிறுவினார் என்று ரக்ரா கூறினார்.
அமெரிக்காவில், அவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார், ஆரம்பத்தில் சில சிறிய வேலைகளைச் செய்த பிறகு, 1977 இல் எரிவாயு நிலையம் மற்றும் பெட்ரோல் பம்ப் வணிகத்தைத் தொடங்கினார் என்று ரக்ரா கூறினார்.
1974 இல் ஹாலந்தை பூர்வீகமாகக் கொண்ட வின்கான்ஸினில் குடியேறிய மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த டெப்ராவை தாலிவால் மணந்தார். இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அவருடைய தந்தை சுபேதார் கர்தார் சிங் தலிவால் பிரிட்டிஷ் ராணுவத்தில் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர்.
தலிவால் ஏன் திருப்பி அனுப்பப்பட்டார்?
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு உதவுவதை நிறுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் தலிவாலிடம் கேட்டுக் கொண்டதாக ரக்ரா கூறினார். சிங்கு எல்லையில் மட்டும் தான் ‘லங்கர்’ ஏற்பாடு செய்வதாகக் கூறினார். “என் சகோதரர் அக்டோபர் 23ம் தேதி இரவு 7:00 மணிக்கு 989 யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் தரையிறங்கினார். அவரிடம் 5-6 மணிநேரம் கேள்வி கேட்டு விசாரித்த பிறகு, அவர் அதே விமானத்தில் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்” என்று ரக்ரா கூறினார்.
தலிவால் கடந்த ஒரு வருடத்தில் 4 முறை இந்தியா வந்ததாகவும், ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் 1-2 மணி நேரம் அவர் துன்புறுத்தப்பட்டதாகவும் அவரது சகோதரர் கூறினார். அவர் கடந்த காலத்தில் இதுபோன்ற துன்புறுத்தலை எதிர்கொண்டதில்லை என்று ரக்ரா கூறினார். தலிவாலின் குடும்பம் ஒரு SAD ஆதரவாளர்கள். ஆனால், அவர் இங்கே எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கவில்லை” என்று ரக்ரா கூறினார்.
அவருக்கு பஞ்சாபில் வணிக ஆர்வம் உள்ளதா?
இவருடைய குடும்பம் விவசாயத்தில் முதன்மையாக ஈடுபட்டுள்ளது. “அவருடைய குடும்பத்துக்கு 100 ஏக்கர் கூட்டு விவசாய நிலம் இருக்கு. பஞ்சாபிலும் அமெரிக்காவிலும் எங்கள் கூட்டுக் குடும்ப வணிகம் உள்ளது” என்று ரக்ரா கூறினார்.
source https://tamil.indianexpress.com/explained/who-is-darshan-singh-dhaliwal-the-nri-sent-back-to-the-us-who-helped-to-tamil-nadu-361558/