புதன், 20 அக்டோபர், 2021

அம்மா உணவகத்தில் சப்பாத்தி நிறுத்தம் :

 

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் தொடக்கப்பட்டது. மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் தரமண உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில், ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு கலவை சாதங்கள், இரவில் 3 ரூபாய்க்கு சப்பாத்தி என குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 3 வேளையும் குறைந்த விலையில் உணவுகள் கிடைப்பதால் ஏழை, எளிய, கூலித்தொழிலாளர்கள் சாலையோரம் வசிப்பவர்கள் இந்த உணவகத்தினால் பெரும் பயனமடைந்தனர்.

கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வந்தபோதும் அம்மா உணவகம் பலரின் பசியை போக்கியது, ஆனால் தற்போது கூட்டம் குறைந்து வரும் நிலையில், அம்மா உணவகத்திலும்  குறைந்த அளவிலேயே உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது அம்மா உணவகத்தில் இரவில் வழங்கப்படும் சப்பாத்தி நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் வார்டுக்கு 2 வீதம் 200 வார்டுகளில் மொத்தம் 400 உணவகங்களும், 7 அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் செயல்படுகிறது.

அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் நஷ்டம்தான் என்றாலும், மாநகராட்சி நிர்வாகம் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வரும் நிலையில், இங்கு பணியில் இருக்கும் பெண்களுக்கு மாதம் 9 ஆயிரம சமபளமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது நிதி நெருக்கடி காரணமாக அம்மா உணவகத்தில் இரவு நேரத்தில் வழங்கப்பட்ட சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக சப்பாத்திக்கு தேவைப்படும் கோதுமை வினியோகம் செய்யாததால், சப்பாத்தி நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறி வரும் நிலையில், தற்போது சப்பத்திக்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் தற்போது இரவு நேரங்களில் தக்காளி சாதம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sourcce https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-amma-unavagam-stop-chappathi-recipe-357686/