Can new variants of the coronavirus keep emerging? – கொரோனா வைரஸின் மாறுபாடுகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்குமா என்ற கேள்வி கேட்டால், புதிதாக கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவும் வரை தொற்று ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தான். ஆனால் தொடர்ச்சியாக மாறுபாடுகளை உருவாக்கும் அல்லது அதிக ஆபத்தை விளைவிக்கும் என்று அர்த்தம் இல்லை.
உலக மக்கள் தொகையில் பாதி பேர் இன்னும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனவே தொடர்ந்து புதிதாக மக்களை பாதித்து அவர்களின் உடலில் ஆயிரக்கணகான வைரஸ்களை அடுத்த சில மாதங்கள் அல்லது வருடங்கள் வரை பிரதி எடுக்கும். ஒவ்வொரு முறையும் ஒரு வைரஸ் தன்னை பிரதி எடுக்கும் போது சிறிய அளவில் பிறழ்வுகள் இருக்கத்தான் செய்யும். இந்த சிறிய பிறழ்வுகள் புதிய மாறுபாட்டினை உருவாக்க உதவும். ஆனால் 2019ம் ஆண்டு வைரஸ் வளர்ச்சி அடைந்தது போன்று தற்போது வளர்ச்சி அடையாது.
ஒரு வைரஸ் ஒரு புதிய உயிரினத்தைப் பாதிக்கும்போது, அது புதிய ஹோஸ்ட்டுக்குப் பரந்து விரிந்து பரவ வேண்டும் என்று பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் வைரஸ் நிபுணர் ஆண்ட்ரூ ரீட் கூறுகிறார்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகள் படி முந்தைய வைரஸ் மாறுபாட்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு பரவும் தன்மை கொண்டது டெல்டா வைரஸ். இது மேலும் பிறழ்வுகள் அடைந்து அதிக பாதிப்புகளை தரும் வைரஸ் மாறுபாடாக மாற முடியும். ஆனால் மறுபடியும் இரண்டு மடங்கு பரவும் சக்தியை கொண்டிருக்காது என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஆடம் லௌரிங் கூறியுள்ளார்.
வைரஸிற்கான விரைவான பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தை நாங்கள் பார்த்தோம். இது பல்வேறு சேதங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் மேற்கொண்டு தீங்குகளை விளைவுக்கும் பண்புகளை அது கொண்டிருக்கவில்லை என்று ஆடம் கூறியுள்ளார்.
வைரஸ் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் உருமாறக் கூடும் ஆனால் அதற்கேற்ற பரிணாம வளர்ச்சி அந்த வைரஸில் இல்லை. அதே போன்று மிகவும் தீவிரமான பாதிப்பிற்கு ஆளாகியுள்ள மக்களும் வெளியே சென்று மற்றவர்களுடன் பழகி, வைரஸை பரப்பும் செயல்களை விரும்பவில்லை.
தடுப்பூசிகள் மற்றும் தொற்றுகளின் விளைவாக ஏற்கனவே மக்கள் உருவாக்கியுள்ள எதிர்ப்பு திறனை எதிர்த்து புதிய மாறுபாடுகள் பரவுமா என்று நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். நிறைய பேர் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ள நிலையில், குறைவான தட்ப்பு திறனை கொண்ட மக்களிடம் மட்டுமே பரவும் வாய்ப்பினையே வைரஸ்கள் கொண்டிருக்கும் என்று டாக்டர் ஜோஷ்வா ஸ்ச்சிஃபெர் கூறியுள்ளார். அவர் ஃப்ரெட் ஹுட்சின்சோன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் வைரஸ் நோயியல் ஆராய்ச்சியாளராக உள்ளார்.
”நோய் எதிர்ப்பு திறனை குறைக்கும் வகையில் வைரஸ்கள் புதிய பிறழ்வுகளை ஏற்படுத்தக் கூடும். அத்தகைய சூழலில் வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசிகள் மாதிரி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்க ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்வார்கள்” என்றும் அவர் கூறினார். 22 10 2021
source https://tamil.indianexpress.com/explained/can-new-variants-of-the-coronavirus-keep-emerging-358964/