புதன், 27 அக்டோபர், 2021

எதனை நோக்கி பயணிக்கிறது சுயஉதவிக்குழுக்கள்??

 எதனை நோக்கி பயணிக்கிறது சுயஉதவிக்குழுக்கள்??

கிராமங்களில் அரங்கேறும்

#பாமரர்களை_பராரியாக மாறிவருவதனை சொல்லும் ஏதார்த்தபதிவு..!!!

மகளிர் குழு என்னும் பெயரில்_கந்து வட்டி கும்பலிடம் சிக்கி தடம் மாறும் குடும்ப பெண்கள்.....

(நமது ஊரில் நடந்து கொண்டுள்ள....

உண்மை நிகழ்வு 5 நிமிடம் பொறுமையாக படிக்கவும்)

நாமக்கல் மாவட்டம்...

குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில்

வசிக்கும் விசைத்தறி தொழிலில் ஈடுபடும் பெண்களை குறிவைத்து...

தனியார் நிதி நிறுவனம் என்னும்,

(கிராம வெளிச்சம்,

அஜ்ஜீவன் மற்றும் பல)

கந்து வட்டி கும்பல்கள்...

மகளிர் குழு என

10 பெண்களை ஒருங்கிணைத்து 

முதலில் தலா 20,000 ரூபாய் கடனாக வழங்கப்படுகிறது...

அந்த தொகை 

52 வாரத்திற்க்கு

அசலும் வட்டியும் சேர்த்து வாரம் 

ரூ625 கட்ட வைக்கிறார்கள்...

(52×625=32,500)

(அசல் 20,000+12,500 

வட்டி)

10 பேரில் யாரவது ஒருவர் வீட்டில் 

சாவு விழுந்து 

இருந்தால் கூட அவர் பணம் கட்ட வேண்டும்.

இல்லையெனில்

மீதம் உள்ள 9 பேரும் அந்த ஒருவர் பணத்தை சேர்த்து கட்ட வேண்டும்,

இது துவக்கம்.

20,000 கட்டி முடித்த உடன் 40,000 என 

கடன் தொகை அதிகரிக்கப்படுகிறது....

40,000 த்திற்க்கு அசலும் வட்டியும் சேர்த்து 2 வருடங்களுக்கு 

வாரம் 490 வீதம் 

கட்ட வேண்டும்....

ஒரு நாளைக்கு 100,150  ரூபாய்க்கு கூலிக்கு வேலை செய்யும பெண் வாரம் 600 ரூபாய் 

கடன் கட்ட 

நிர்பந்திக்கப்படுகிறார்...

கணவன் மனைவி 2 பேரும் வேலைக்கு 

செல்லும் குடும்பத்தில் இது பெரிய பாரம் இல்லை...

ஆனால்,

கணவனை இழந்த, (கணவன் இருந்தும் இல்லாத) குழந்தைகளை வளர்த்து வரும் பெண்களால் வாரம் ரூ 600 எப்படி கட்ட முடியும்...???

வேலை இல்லாத வாரங்களிலும்,

பண்டிகை, விடுமுறை

வாரங்களிலும் கூட கட்டாயம் பணம் கட்டியே ஆக வேண்டும்.

(கந்து வட்டிக்காரன் கூட வேலையில்லை அடுத்த வாரம் தருகிறேன் 

என்றால் போய் விடுவான்)

இதனால் குழுவுக்கு பணம் கட்ட வேண்டும்,

என்று அக்கம் பக்கம்

உள்ளவர்களிடமும்,

தெரிந்தவர்களிடமும்

கடன் வாங்குகிறார்கள்.

ஏற்கனவே வாங்கிய கடனுடன் இந்த கடனும் சேர்வதால், 

வேறு 10 பெண்களுடன்

சேர்ந்து வேறு நிதி நிறுவனத்தில் குழு கடன் பெறுகிறார்.

எனக்கு தெரிந்த வரையில் 2,3 நிதி நிறுவனங்களில் 

20,000

40,000

என 1 லட்சம் வரை 

ஒரு பெண் கடன் பெறுகிறாள்.

வாங்கிய கடனுக்கு..

1வாரத்திற்க்கு,

1 குழுவிற்க்கு ரூ 600 வீதம்...

3 குழுவிற்க்கு 

1,800 முதல்

2,000 ரூபாய் வரை

ஒரு பெண் கடன் கட்ட வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆளக்கப்

பட்டுள்ளார்கள்.....

விசைத்தறி கூலி வேலை செய்யும் ஒரு பெண் வாரம் ரூ 2,000

எப்படி கட்ட முடியும்....???

குழு பணம் கட்ட வேண்டும் என்று பெண்கள் வீடு வீடாக சென்று பிச்சை எடுக்காத குறையாகவும்...

பிச்சை எடுத்தும்

பணம் கட்டுகிறார்கள்...

பணம் கட்டவில்லை என்றால் மற்ற 9 பெண்களும் சேர்ந்து

அந்த பெண்ணின் வீட்டிற்க்கு சென்று

கண்டபடி திட்டுகிறார்கள்...

(மேலே கூறியுள்ளவை அனைத்தும் நம் அக்கம் பக்கத்து வீடுகளில் அன்றாடம் நடைபெறும்

சம்பவங்கள்....)

எத்தனை நாளைக்கு 

இப்படி அடுத்தவர்களிடம் பிச்சை எடுப்பது,

திட்டுவாங்குவது என

நினைத்து விரக்தியில் இருக்கும் பெண்கள்,

எடுக்கும் முடிவு

விபரீதமாக மாறுகிறது...

அந்த பெண்ணுக்கு  நாள் ஒன்றுக்கு கடன் கட்ட ரூ500 தேவைப்படுகிறது

(சில பெண்கள் தற்கொலை செய்ய துணிகிறார்கள்,சிலர்

குழந்தைகளுக்காக

தடம் மாற துணிகிறார்கள்...)

அந்த குழுவில் உள்ள 

10 பெண்களில் ஒருவர்,

அல்லது  வேறு யாராவது  ஒருபெண் அவளுக்கு தவறான வழி காட்டுகிறார்கள்..

ஆம் அவள் பணத்திற்க்காக  தன்னையே விற்க்க துணிகிறாள்...

தவறான வழியில் பணம் சம்பாதிக்க தன்னை தயார் படுத்தி கொண்டு....

தடம் மாறுகிறாள்...

நான் மேலே கூறியுள்ளவைகள் அனைத்தும் நம்மை சுற்றி தினமும் 

நடக்கும்  உண்மையே....

யாரையும் தவறாக

சித்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை....

நம் ஊரில், 

நம் கண்முன்னேலேயே

பல பெண்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டுள்ளார்கள்...

இந்த அவலம் நாள் தோறும் அதிகரித்துக்கொண்டே உள்ளது...

பெரியோர்கள் இந்த விசயத்தை முன்னெடுத்து,

நமது  பெண்களுக்கு

விழிப்புணர்வு ஏற்படுத்தி நம் பெண்கள் காப்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்...

மேலே கூறியுள்ள தகவல்களை.... (மன)சாட்சியுடன்

நிருபிக்க பலர் தயாராக உள்ளனர் என்பது வேதனையே..!!

Related Posts: