வியாழன், 21 அக்டோபர், 2021

போலீஸ் காவலில் இறந்தவரின் குடும்பத்தை சந்திக்க சென்ற பிரியங்கா; தடுத்து நிறுத்திய உ.பி காவல்துறை

 Congress leader priyanka gandhi, priyanka gandhi stopped UP police, போலீஸ் காவலில் இறந்தவரின் குடும்பத்தை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம் உத்தரப் பிரதேசம், உபி காவல்துறை, Uttar Pradesh, congress, dalit youth custody death

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தில், போலீஸ் காவலில் இறந்தவரின் உறவினர்களைச் சந்திக்கச் சென்றார். அப்போது, எந்த அரசியல் ஆளுமையும் அங்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று ஆக்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ்வேயில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள வத்ரா போலீஸ் காவலில் இறந்த வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த அருண்குமாரின் குடும்பத்தை சந்திக்கச் சென்றபோது அவரை போலீசார் தடுத்தனர். இருப்பினும், பின்னர் ஆக்ரா செல்லும் வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக, ட்விட்டரில் பிரியங்கா, “அருண் வால்மீகி போலீஸ் காவலில் இறந்தார். அவருடைய குடும்பம் நீதி கேட்கிறது. நான் அவருடைய குடும்பத்தை சந்திக்க விரும்புகிறேன். உ.பி அரசு எதற்கு அஞ்சுகிறது? நான் ஏன் நிறுத்தப்படுகிறேன்? இன்று பகவான் வால்மீகி ஜெயந்தி, பிரதமர் மகாத்மா புத்தரைப் பற்றி பெரிதாகப் பேசினார். ஆனால், அவருடைய பேச்சுக்கு எதிராக செயல்படுகிறார்.

அந்த நபரின் மரணத்தைத் தொடர்ந்து எந்த அரசியல் ஆளுமையும் அங்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று ஆக்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் கோரியதால், காங்கிரஸ் பொதுச் செயலாளர் நிறுத்தப்பட்டதாக காவல்துறை கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரியங்கா காந்தி கைது செய்யப்படவில்லை. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. முதலில் கட்சி அலுவலகம் அல்லது அவரது இல்லத்திற்கு செல்லுமாறு போலீசாரால் கேட்கப்பட்டது, ஆனால், அவர் ஒப்புக்கொள்ளாததால், அவர் காவல் துறைக்கு அனுப்பப்பட்டார் என்று லக்னோ போலீஸ் கமிஷனர் டி.கே.தாக்கூர் கூறினார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனாலும், பிரியங்கா காந்தி, காவலில் உயிரிழந்த அருண்குமாரின் குடும்பத்தை சந்திக்கப் போகிறேன் என்று கூறினார். “நான்கு பேர் இப்போது ஆக்ராவிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் … நாங்கள் குடும்பத்தை சந்திக்க அங்கு செல்கிறோம்” என்று பிரியங்கா காந்தி கூறினார்.

குஷிநகரில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, ஆக்ரா செல்வதைத் தடுத்து நிறுத்தியதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.

காவல் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​பிரியங்கா செய்தியாளர்களிடம் தான் கண்டிப்பாக ஆக்ராவுக்கு செல்வேன் என்று கூறினார்.

ரூ.25 லட்சம் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட அருண், ஜெகதீஷ்புரா காவல்நிலையத்தில் விசாரணையின் போது அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து போலீஸ் காவலில் இறந்தார் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

திருடிய பணத்தை மீட்பதற்காக அவரது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டபோது, ​​குற்றம்சாட்டப்பட்ட அருண் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் முனிராஜ் ஜி கூறினார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என்று கூறினார்.

அருண் மரணம் குறித்த கேள்வி எழுப்பிய பிரியங்கா காந்தி, அருண் குடும்பத்தை சந்திக்க மாநில தலைநகரிலிருந்து ஆக்ராவிற்கு சாலை வழியாக புறப்பட்டார். ஆனால், லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் லக்னோ காவல்துறையால் அவர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆக்ரா மாவட்ட மேஜிஸ்ட்ரேட் கோரிக்கையை காரணம் காட்டி எந்த அரசியல் நபரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.

நான் லக்னோவை விட்டு வெளியேறும் போதெல்லாம் எனக்கு அனுமதி வேண்டுமா? என்னை ஏன் ஆக்ரா செல்ல அனுமதிக்கவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கிறதா என்று பிரச்சனையா? என்று அவரை தடுத்து நிறுத்திய போலீசாரிடம் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.

“யாராவது ஒருவர் இறந்துவிட்டார், அது எப்படி சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக இருக்கும்? அவரை அழைத்த மாவட்ட மேஜிஸ்ட்ரேட்டை கேளுங்கள். நான் எங்கும் வெளியே செல்ல முடியாத அளவுக்கு கெடுபிடி அதிகமாக உள்ளது. மேலும் லக்னோவில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளேன்”என்று ஆக்ரா மாவட்ட ஆட்சியரிடமிருந்து வந்த செய்தியை அவர் போலீசாரிடம் காட்டினார்.

காங்கிரஸ் கட்சியினர் திரளாக வந்து உ.பி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

அருண் துப்புரவு பணியாளராக பணியாற்றிய காவல்நிலையத்தின் ‘மால்கானா’ (போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு சேமிப்பு வீடு)-வில் இருந்து சனிக்கிழமை இரவு பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த திருட்டைத் தொடர்ந்து, ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசர் உட்பட 6 போலீஸ் அதிகாரிகள் ஆக்ரா மண்டலத்தின் கூடுதல் டைரக்டர் ஜெனரலால் (ஏடிஜி) இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

விசாரணையின் போது, ​​பல சந்தேக நபர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அருண் அவர்களில் ஒருவராக இருந்தார், ஏனெனில் அவர் ‘மால்கானா’வுக்கு சென்றதாக கூறுகின்றனர்.

அருண் செவ்வாய்க்கிழமை ஆக்ராவில் உள்ள தாஜ் கஞ்ச் பகுதியில் கைது செய்யப்பட்டார். அருண் தனது அடையாளத்தை மறைக்க அருண் மொட்டையடித்துக்கொண்டார் என்று காவல்துறை கூறுகின்றனர்.

“இந்த திருட்டு தொடர்பாக பல சந்தேக நபர்களை போலீஸ் குழு விசாரித்து வந்தது. செவ்வாய்க்கிழமை மாலை, லோஹமண்டி பகுதியில் வசிக்கும் அருண் என்ற நபர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார்” என்று பிடிஐ செய்தி நிறுவனத்தின் செய்தியை மேற்கோள் காட்டி ஆக்ரா எஸ்.எஸ்.பி கூறினார்.

“விசாரணையின் போது, ​​அருண் தான் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், திருடப்பட்ட பணம் அவரது வீட்டில் இருப்பதாக எங்களுக்கு தெரிவித்தார்” என்று அவர் கூறினார்.

அவரது உடல்நிலை மோசமடைந்து இறப்பதற்கு முன்பு அவரது வீட்டில் நடந்த சோதனையில் ரூ.15 லட்சத்தை போலீசார் மீட்டனர்.

source https://tamil.indianexpress.com/india/congress-leader-priyanka-gandhi-stopped-up-police-358248/