செவ்வாய், 19 அக்டோபர், 2021

அக்டோபர் மாதத்தில் ஏன் இவ்வளவு மழை? பருவமழை காரணங்களை விளக்கும் சிறப்பு கட்டுரை

 பருவமழை முடிந்துவிட்டது. ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. டெல்லி, கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் கடந்த சில நாட்களில் பெய்த கனமழை காரணமாக ஒரு சில இடங்களில் உயிர் மற்றும் பொருள் சேதாரங்களை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகள் கழித்து மிகவும் ஈரப்பதமான 24 மணி நேரத்தை டெல்லி இந்த பொழுதில் பெற்றுள்ளது.

கால தாமதமாக துவங்கிய பருவமழை, காற்றழுத்த தாழ்வு நிலைகள் பல்வேறு இடங்களில் உருவாகியது இது போன்ற கனமழைக்கான வாய்ப்புகளை உருவாக்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அக்டோபர் மழை

அக்டோபர் மாத மழை ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல. மாற்றத்திற்கான மாதம் என்று இது கூறப்படுகிறது. இந்திய நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்புகளை வழங்கும் காலமாகும். இது பெரிதும் தென்னிந்தியாவின் கிழக்கு பகுதிகளுக்கு மட்டும் அதிக மழைப்பொழிவை தரும் காலமாகும்.

மேற்கு இடையூறுகள், இந்தியாவின் வடக்கு பகுதிகளில் உள்ளூர் காலநிலையில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக மழை அல்லது பனிப்பொழிவு ஏற்படுகிறது. கடந்த வாரம் முதல் லடாக், காஷ்மீரின் உயர்ந்த சிகரங்கள், மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டது.

கடந்த வாரம், இரண்டு குறைந்த அழுத்த தாழ்வு நிலை ஒரே நேரத்தில் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் செயல்படத் துவங்கின. இது கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கடுமையான வானிலை நிகழ்வுகளை உருவாக்க காரணமாக அமைந்தது.

பருவமழை இந்திய நிலப்பரப்பில் இருந்து வெளியேறுவதில் ஏற்பட்ட தாமதம்

நான்கு மாத தென்மேற்கு பருவமழை பொதுவாக அக்டோபர் மாத துவக்கத்தில் முழுமையாக வெளியேறிவிடும். வெளியேறும் காலங்களில் இடி, மின்னலுடன், கனமழையை இந்நிகழ்வு உருவாக்கும்.

இந்த ஆண்டு, பருவமழை இந்திய நிலப்பரப்பைவிட்டு அக்டோபர் 6ம் தேதி முதல் நீங்க துவங்கியது. இது பொதுவாக செப்டம்பர் மாதம் 17ம் தேதியிலேயே ஆரம்பமாகிவிடும். இதுவரை மேற்கு, வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் இருந்து பருவமழை வெளியேறிவிட்டது. ஆனால் தென்னிந்தியாவில் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறது. இந்த காரணத்தால் தமிழகம், கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடந்த 10 நாட்களில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

திங்கள் கிழமை வரை மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் மற்றும் முழுமையான தென்னிந்திய மாநிலங்களில் இருந்து தென்மேற்கு பருவமழை நீங்கவில்லை.

இந்த தாமதம் காரணமாக ஒடிசாவில் நல்ல மழை பொழிவு நிகழ்ந்துள்ளது. வடகிழக்கு மற்றும் தென்னிந்தியாவிலும் கணிசமான மழைப் பொழிவு இருந்துள்ளது என்று ஐ.எம்.டியின். நிர்வாக இயக்குநர் மிருத்யுன்ஜெய் மொஹபத்ரா கூறியுள்ளார்.

பொதுவாக, அக்டோபர் நடுப்பகுதியில், பருவக்காற்று தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி வீசும் திசையை மாற்றுகிறது. கிழக்கு மாற்று மேற்குக் காற்றை மாற்ற துவங்கினாலும், கிழக்கு காற்று இன்னும் வலிமையாக முழுமையாக நிறுவப்பட்டதாக இருக்கிறது. கிழக்கு காற்று வடகிழக்கு பருவமழையின் வருகையைக் குறிக்கிறது ”என்று புனேவின் ஐஎம்டியின் காலநிலை ஆராய்ச்சி மற்றும் சேவைகளின் தலைவர் டி சிவானந்த் பை கூறினார்.

இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான நிலைமைகள் அக்டோபர் 25 இல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகக் கனமழை

கடந்த வாரத்தின் பெரும்பாலான நாட்களில், குறைந்தது இரண்டு குறைந்த அழுத்த அமைப்புகள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகள் மற்றும் மத்திய இந்தியா முழுவதும் செயல்பட்டு, நாட்டின் பெரும்பகுதிகளுக்கு மழைப்பொழிவை தந்தது.

டெல்லி ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைக்கு இடையே 87.9மி.மீ மழைப் பொழிவை பெற்றுள்ளது. 1901ம் ஆண்டு முதலிருந்து நான்காவது முறையாக அதிக ஈரப்பதமான அக்டோபர் மாத நாளை வழங்கியது. கடந்த நூறாண்டுகளில் அதிக ஈரப்பதமான நான்கவது அக்டோபர் மாதமும் இதுவாகும். இந்த மாதத்தில் இதுவரை 94.6 மி.மீ மழையை டெல்லி பெற்றுள்ளது. 1954ம் ஆண்டு 238.2 மி.மீ மழையையும், 1956ம் ஆண்டு 236.2 மி.மீ மழையையும், 1910ம் ஆண்டு 186.9 மி.மீ மழையையும் டெல்லி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் 210 மி.மீ மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் அதிக மழைப்பொழிவை பெற்ற இரண்டாவது நிகழ்வாகும்.

தமிழகம் பொதுவாக அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதத்தில் அதிக அளவு மழைப்பொழிவை பெறும். கோவை 110 மி.மீ மழைப் பொழிவை பெற்று, 10 ஆண்டுகளில் மிகவும் ஈரப்பதமான நாளை அடைந்தது. இது வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே நிகழ்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மழை, வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியா அதிகமான மழைப்பொழிவை பெறும் பகுதிகள் என்று அறியப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் குறுகிய கால இடைவெளியில் தீவிர மழைப் பெய்யும் நிகழ்வு அடிக்கடி நடைபெற்று வருகிறது.

காலநிலை மாற்றம் காரணமாக, , ஆண்டு முழுவதும் தீவிர மழைப்பொழிவு வருடம் முழுவதும் நிகழும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நாம் காணும் கனமான மற்றும் மிக கனமழையின் இந்த குறிப்பிட்ட நிகழ்வுகள் குறைந்த அழுத்த அமைப்புகளின் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கலாம், ”என்று மொஹாபத்ரா கூறினார்.

குறைந்த அழுத்த அமைப்பு இருக்கும் போதெல்லாம், அதன் வலிமையைப் பொறுத்து, அது கனமான அல்லது மிக அதிக மழைப்பொழிவு செயல்பாட்டை விளைவிக்கிறது. கூடுதலாக, குறைந்த அழுத்த அமைப்பு மேற்கு இடையூறுடன் தொடர்பு கொள்ளும்போது அது தீவிரமழையாக மாறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழை

கிழக்கு மத்திய அரபிக் கடலில் குறைந்த அழுத்த நிலை உருவாகி கேரளாவில் அக்டோபர் 15 – 17 தேதிகளுக்கு இடையே கடந்தது. அதே நேரத்தில் மற்றொரு குறைந்த அழுத்த நிலை ஆந்திர கடற்கரை மற்றும் கிழக்கு ஒடிசா பகுதிகளில் நிலவியது. இந்த இரண்டுக்கும் இடையேயான சந்திப்பு தென்மேற்கு காற்றை வலுப்படுத்தியது. இது அதிக மழைப்பொழிவை மத்திய மற்ற்கு கிழக்கு கேரளாவில் கடந்த வார இறுதியில் வழங்கியது.

இடுக்கி, எர்ணாக்குளம், கொல்லம், கோட்டயம் போன்ற மாவட்டங்களில் 24 மணி நேர மழைப்பொழிவு 200 மி.மீக்கும் அதிகமாக பதிவானது. இந்த மாவட்டங்கள் பல மலைப்பாங்கான மற்றும் அடர்ந்த காடுகளால் மூடப்பட்ட பகுதிகள் ஆகும். காற்றாற்று வெள்ளம் நிலச்சரிவுகளையும் மண் சரிவுகளையும் ஏற்படுத்தியது.

எதிர்வர இருக்கும் வடகிழக்கு பருவமழை

கேரளாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய குறைந்த அழுத்தம் தற்போது பலவீனம் அடைந்துள்ளது. ஆனால் அதே போன்ற ஒரு அமைப்பு மத்திய இந்தியாவில் இன்னும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால் இந்த வாரமும் வட இந்தியா நல்ல மழைப்பொழிவை பெற்றுள்ளது.

மேற்கு உ.பி., உத்திரகாண்ட் மற்றும் ஹிமாச்சல் ஆகிய பகுதிகளில் இன்று நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

மற்றொரு குறைந்த அழுத்தம் வடக்கு ஒடிசா மற்றும் கங்கை, மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது. வங்கக் கடலில் இருந்து வீசும் ஈரப்பதமான கிழக்கு காற்றுடன் சேர்ந்து தற்போது இன்னும் செயலில் உள்ளது. மேற்குவங்கம், ஒடிசா, சிக்கிம் மற்றும் பீகார் மீது புதன்கிழமை வரை பலத்த மழையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாயன்று மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் சில இடங்களில் மிக அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம்.

வங்காள விரிகுடாவில் இருந்து வீசும் பலத்த தென்கிழக்கு காற்று புதன்கிழமை வரை அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயாவில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/explained/southwest-monsoon-2021-why-october-been-so-rainy-357273/