புதன், 20 அக்டோபர், 2021

தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவர்? முக்கிய நிர்வாகியை அழைத்து சோனியா ஆலோசனை

 Who is next tamilnadu congress committee president, TN Muruganandham meets Sonia Gandhi, TNCC, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார், சோனியா காந்தி அழைத்த முக்கிய தலைவர் முருகானந்தம், டாக்டர் செல்லக்குமார், congress, tamilnadu congress, ks alagiri,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமனம் செய்வது தொடர்பான யூகங்கள் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அண்மையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஒருவருக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவான டி.என். முருகானந்தம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தின் பராமரிப்புக் குழு பொருப்பாளராக உள்ளார். இவரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அலுவலகம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையைச் சுற்றி பேசப்படும் விஷயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விவாதிக்க அழைத்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செஞ்சி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ டி.என். முருகானந்தம், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது, அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செயல்பாடுகள் பற்றி தலைமைக்கு விளக்கியுள்ளார்.

பொதுவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி 2 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், தற்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கே.எஸ்.அழகிரி, பிப்ரவரி 8, 2019ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவாக பதவியேற்றார். அதன்படி பார்த்தால், 2 ஆண்டுகள் 8 மாதங்கள் ஆகிவிட்டது. அதனால்தான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமனம் செய்வது பற்றிய பேச்சுகள் எழுந்தன என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் எம்.எல்.ஏ எஸ். விஜயதரணி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன் ஆகியோர் போட்டிபோடுவதாக வதந்திகள் வெளியான நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ டி.என். முருகானந்தம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாந்தியை சந்தித்திருப்பது இந்த வதந்திகளை உறுதிப்படுத்தியுள்ளன.

உ.பி.யில் விவசாயிகள் படுகொலை சம்பவம், காங்கிரஸ் கட்சியின் போராட்டம், இதையடுத்து, பிரியங்கா காந்தி நேரில் செல்ல முயன்றபோது கைது நடவடிக்கை, பஞ்சாப் மாநில காங்கிரஸில் எழுந்த பூசல் ஆகியவை , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமனம் செய்வது தொடர்பான விஷயத்தில் டெல்லி காங்கிரஸ் தலைமை கவனம் செலுத்தவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்றுவதன் மூலம் மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்த காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்பது குறித்து விவாதிக்க அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டி தலைமை நினைக்கும் வரை, தற்போது தலைவராக உள்ள கே.எஸ். அழகிரி தொடருவார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் இளைஞர்களையும் மூத்தவர்களையும் ஒறுமையை அறவணைத்துச் செல்லும் ஒருவராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.என். முருகானந்தம் டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்தபோது, அவர் தற்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், டி.என். முருகானந்தம் அல்லது டாக்டர் செல்லக்குமார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்ன முடிவெடுப்பார் என்பது யாருக்கும் தெரியாது என்று தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

source https://tamil.indianexpress.com/tamilnadu/who-is-next-tamilnadu-congress-committee-president-tn-muruganandham-meets-sonia-gandhi-357593/