திங்கள், 25 அக்டோபர், 2021

நடிகை காயத்ரி ரகுராம் பற்றி வக்கிர பதிவு: திமுக ஐடி விங் நிர்வாகி மீது நடவடிக்கை

 25 10 2021 தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவரான காயத்திரி ரகுராம், அண்மையில் பாஜக நிர்வாகிகளுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவரை எடுத்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தினர்.

உடனடியாக கணக்கை ஜெயச்சந்திரன் பிரைவட்டாக மாற்றி புதிதாக யாரும் புகைப்படத்தைப் பார்க்க முடியாத மாறி செய்தாலும், அந்த பதிவின்  ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளத்தில் வைரலானது.



இதையடுத்து, தன்னை ஆபாசமாகச் சித்தரித்த தி.மு.க பிரமுகர் ஜெயச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் புகார் கொடுத்தார். இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்த திமுக ஐடி விங், களத்தில் இறங்கியுள்ளது. 

இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், மாநில நிதியமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், ” மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன், கழக கட்டுப்பாட்டை மீறியும், அணிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவர் அப்பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என குறிப்பிட்டிருந்தார்.

பிடிஆர் நடவடிக்கைக்கு பதிலளித்த காயத்திரி ரகுராம், “ஏன் தற்காலிகமாக நீக்கம்? தமிழ்நாட்டுக்கு ஜெயச்சந்திரன் மற்றும் ராமலிங்கம் போன்றவர்கள் பயங்கரமான வக்கிரங்கள் மோசமான சேவை நாங்கள் விரும்பவில்லை.. எனக்கு நீதி வேண்டும். அவரை Goondas கைது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-it-wing-member-suspend-for-post-gayathiri-raguram-portrayal-as-pornographic-359594/