வியாழன், 21 அக்டோபர், 2021

சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வு ஏன்? இந்தியாவிற்கான பாதிப்பு என்ன?

 உலகளாவிய பொருளாதார மீட்பு வலுப்பெற்று வருவதால், கச்சா எண்ணெயின் விலை 2018 ஆம் ஆண்டிலிருந்து மிக உயர்ந்த மட்டத்தை நெருங்குகிறது. அதேபோல், இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரியின் விலையும், தீவிரமான ஆற்றல் பற்றாக்குறைக்கு மத்தியில் சாதனை உச்சத்தை எட்டியுள்ளது.

எரிபொருள் விலை ஏன் உயர்கிறது?

உலகப் பொருளாதாரம் தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவதால், உலகளாவிய தேவையின் கூர்மையான அதிகரிப்பால், பிரெண்ட் கச்சாவின் விலை இந்த வார தொடக்கத்தில் பீப்பாய்க்கு 85 டாலருக்கு உயர்ந்து, 2018 க்குப் பிற்கு உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக அதிகரித்த போதிலும், எண்ணெய் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள், படிப்படியாக அதிகரிக்கும் உற்பத்தி அட்டவணையில், கச்சா எண்ணெய் விநியோகத்தை வைத்திருக்கின்றன. தற்போது, ப்ரெண்ட் கச்சாவின் விலை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த பேரலுக்கு 42.5 டாலர் விலையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் குழுவான OPEC+, அதன் சமீபத்திய கூட்டங்களில், நவம்பர் மாதத்தில் விலைகள் கூர்மையாக அதிகரித்திருந்தாலும் மொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தை ஒரு நாளைக்கு 400,000 பீப்பாய்கள் மட்டுமே அதிகரிக்கும் என்று மீண்டும் உறுதிப்படுத்தியது. சவுதி அரேபியா, ரஷ்யா, ஈராக், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் குவைத் ஆகிய எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடுகளின் உற்பத்தி அளவானது, நவம்பரில் விலை அதிகரித்தாலும் உற்பத்தியின் குறிப்பு அளவை விட சுமார் 14 சதவீதம் குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளன.

2020 ஆம் ஆண்டில் கொரோனா காரணமான உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகளால், 2020 ஆம் ஆண்டில் விநியோகத்தில் கூர்மையான வீழ்ச்சி இருந்தததை OPEC+ ஒப்புக்கொண்டது. ஆனால் தேவை அதிகரித்தபோதிலும் நிறுவனம் உற்பத்தியை அதிகரிப்பதில் மெதுவாக இருந்தது. இந்தியாவும் மற்ற எண்ணெய் இறக்குமதி நாடுகளும் எண்ணெய் விநியோகத்தை வேகமாக அதிகரிக்க OPEC+ க்கு அழைப்பு விடுத்துள்ளன. மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அது உலகப் பொருளாதாரத்தின் மீட்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் அந்த நாடுகள் வாதிட்டன.

எஸ்பி குளோபல் பிளாட்ஸின் கூற்றுப்படி, ஆசியாவிற்கான இயற்கை எரிவாயு விநியோகம் நவம்பரில் டெலிவரிக்கு ஒரு mmbtu க்கு (மெட்ரிக் மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்) $ 56.3 என்ற மிக உயர்ந்த உச்சத்தை எட்டும். ஐடா சூறாவளியால் ஏற்படும் இடையூறுகள் உட்பட அமெரிக்காவில் விநியோகப் பிரச்சினைகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து எதிர்பார்க்கப்படும் இயற்கை எரிவாயு விநியோகத்தை விட குறைவு ஆகியவை ஐரோப்பாவில் அதிகரித்து வரும் எரிவாயு தேவைக்கு மத்தியில் குளிர்காலத்தில் இயற்கை எரிவாயு பற்றாக்குறையின் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

சீனா நிலக்கரி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால் சர்வதேச நிலக்கரி விலைகளும் எல்லா நேரத்திலும் உச்சத்தை எட்டியுள்ளன. எதிர்பார்த்ததை விட வேகமான பொருளாதார மீட்பால் உலகளாவிய தேவையின் காரணமாக, இந்தோனேசிய நிலக்கரியின் விலை அக்டோபரில் ஒரு டன்னுக்கு சுமார் $ 200 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இது மார்ச் மாதத்தில் ஒரு டன்னுக்கு சுமார் $ 60 ஆக இருந்தது.

இந்தியாவிற்கான தாக்கம் என்ன?

கச்சா எண்ணெய் விலைகளின் அதிகரிப்பால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் புதிய சாதனை படைத்தது. தேசிய தலைநகரில் கடந்த மூன்று வாரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4.65 அதிகரித்து ரூ. 105.84 ஆக உள்ளது. அதே காலகட்டத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ .5.75 உயர்ந்து ரூ. 94.6 ஆக உள்ளது.

தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகளுக்குப் பிறகு டீசலை விட இந்தியாவில் பெட்ரோல் நுகர்வு வேகமாக மீண்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தில் பெட்ரோல் நுகர்வு 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது, ஆனால் டீசல் நுகர்வு 2020 ஐ விட 6.5 சதவிகிதம் குறைவாக உள்ளது. இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வில் சுமார் 38 சதவிகிதம் டீசல் ஆகும், இது தொழில் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருளாகும்.

வரவிருக்கும் பண்டிகை காலங்கள் பொருளாதார மீட்சியை துரிதப்படுத்தவும் டீசல் பயன்பாட்டை அதிகரிக்கவும் செய்யும் என்பதால், இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் டீசலுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என எஸ் & பி குளோபல் பிளாட்ஸ் அனலிட்டிக்ஸ் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், ப்ளாட்ஸ் அனலிட்டிக்ஸ் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய்க்கான தேவை 2022 இல் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை மட்டுமே மிஞ்சும் என்று கணித்துள்ளது.

சர்வதேச எரிவாயு விலைகள் அதிகரிப்பு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு வழிவகுத்தது. பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பானது (PPAC), அரசுக்குச் சொந்தமான ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் விலையை முந்தைய ஆறு மாத காலத்தில் ஒரு எம்எம்பிடிக்கு 1.79 டாலரிலிருந்து 2.9 டாலராக உயர்த்தியது. மேலும் PPAC முந்தைய ஆறு மாத காலத்தில் அதிக ஆழமான நீரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எரிவாயுக்கான உச்சவரம்பு விலையை ஒரு mmbtu க்கு $ 6.13 ஆக உயர்த்தியுள்ளது, மற்றும் உயர் அழுத்தம், உயர் வெப்பநிலை மூலம் பெறப்படும் எரிவாயுக்களின் விலையை ஒரு mmbtu க்கு $ 3.62 ஆக உயர்த்தியுள்ளது.

எரிவாயு விலையின் அதிகரிப்பு, போக்குவரத்து எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மற்றும் சமையல் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் குழாய் இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) ஆகிய இரண்டின் விலையில் மேல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய தலைநகரில் சிஎன்ஜியின் விலை இந்த மாதம் கிலோவுக்கு ரூ .4.56 ஆக இரண்டு முறை உயர்த்தப்பட்டு ரூ .49.8 ஆக உயர்ந்துள்ளது மற்றும் PNG- யின் விலை PNG- யின் ஒரு scm (நிலையான கன மீட்டர்) க்கு ரூ. 4.2 உயர்ந்து SCM ஒன்றுக்கு ரூ .35.11 ஆக உயர்ந்துள்ளது.

நிலக்கரியின் சர்வதேச விலைகள் அதிகரிப்பு, இந்தியாவின் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையை அதிகரித்துள்ளது. மேலும், நிலக்கரியின் அதிக விலையை வாங்குவோருக்கு கடத்தி மின்சாரம் வழங்குவதை நிறுத்த முடியாமல், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி அனல் மின்நிலையங்களை இயங்க கட்டாயப்படுத்தியுள்ளது. பல நிலக்கரி அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைந்ததால் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் தடை ஏற்பட்டதுள்ளது மற்றும் பவர் எக்ஸ்சேஞ்சில் சாதாரண விலைக்கு மேல் மின்சாரத்தை வாங்க மாநிலங்களை கட்டாயப்படுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/high-international-fuel-prices-impact-on-india-357877/