செவ்வாய், 19 அக்டோபர், 2021

ஒலியை விட 5 மடங்கு வேகமாக பயணிக்கும் ஹைப்பர்சோனிக்; மறைமுக அணு ஆயுத சோதனையில் சீனா

 China hypersonic glide vehicle test : லண்டனை தளமாக கொண்ட ஃபினான்சியல் டைம்ஸ் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி ஒன்றில், சீனாவில் இருந்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சீனா ஆகஸ்ட் மாதத்தில் அணுசக்தி திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் க்ளைட் ஏவுகணையை சோதனை செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. தன்னுடைய இலக்கை அடைவதற்கு முன்பு பூமியை ஒரு முறை இந்த ஏவுகணை சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 5 மடங்கு வேகமானது.

சோதனை

ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையில், சீனாவின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்த 5 நபர்கள், சீன ராணுவம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைய சுமந்து செல்லும் ராக்கெட்டை ஏவியது என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளது. இது குறைந்த வட்டப்பாதையில் சுற்றிய பிறகு தன்னுடைய இலக்கை தாக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சோதனை அமெரிக்க உளவுத்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை தன்னுடைய இலக்கை 2 டஜன் மைல்களுக்கு அப்பால் “மிஸ்” செய்துவிட்டது என்று உளவுத்துறையிடம் பேசிய மூன்று நபர்கள் கூறியுள்ளனர். ஆனால் இருவர், ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் சீனா வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அமெரிக்க அதிகாரிகள் உணர்ந்ததை விட வேகமாக முன்னேறியதை ஆய்வுகள் காட்டுகிறது என்றும் கூறியுள்ளனர். . இந்த சோதனை சீனாவின் இராணுவ நவீனமயமாக்கலை ஏன் அமெரிக்கா அடிக்கடி குறைத்து மதிப்பிடுகிறது என்ற புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது என்று எஃப்.டி. தன்னுடைய செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளது.

ஒரு பாதுகாப்பு அதிகாரியையும், மக்கள் விடுதலை இராணுவத்திற்கு நெருக்கமான மற்றொரு சீன பாதுகாப்பு நிபுணரையும் மேற்கோள்காட்டி, இந்த ஆயுதத்தை அரசுக்குச் சொந்தமான சீனா அக்கெடெமி ஆஃப் ஏரோஸ்பேஸ் ஏரோடைனமிக்ஸ், சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இந்த சி.ஏ.ஏ.ஏ. ( China Academy of Aerospace Aerodynamics (CAAA)) சீனாவின் விண்வெளி திட்டங்களுக்கு தேவையான ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை உற்பத்தி செய்யும் அங்கமாகும். இரண்டு வட்டாரங்களும் விண்வெளி திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் லாங் மார்ச் ராக்கெட்டில் வைத்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக கூறியுள்ளது.

முக்கியத்துவம்

செய்தியின் படி, இந்த சோதனை குறித்து நன்கு அறிந்த இருவர், தென் துருவம் வரை இந்த ஆயுதம் பயணிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். இது அமெரிக்க இராணுவத்திற்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும், ஏனெனில் அதன் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் வடக்கு துருவ பாதையில் கவனம் செலுத்துகின்றன.

சீனா அகாதெமி ஆஃப் லாஞ்ச் வேஹிக்கில் டெக்னாலஜியை மேற்கொள்காட்டி ஜூலை 19ம் தேதி அன்று தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில், லாங் மார்ச் 2சி ராக்கெட்டை, தங்களின் 77வது சோதனையில் ஏவியதாக குறிப்பிட்டது. ஆகஸ்ட் 24ம் தேதி அன்று 79வது செயல்பாட்டை குறித்தது. ஆனால் 78வது லாஞ்ச் பற்றிய எந்த அறிவிப்பையும் வழங்காதது ரகசிய சோதனை தொடர்பான சந்தேகங்களுக்கு வழி வகுத்தது என்று எஃப்.சி. வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்கி வருகின்றன, இதில் ராக்கெட் மூலம் விண்வெளியில் செலுத்தப்படும் கிளைடு வாகனங்களும் உள்ளன. ஆனால் இது ஆனால் அவற்றின் சொந்த வேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன என்று செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஹைப்பர்சோனிக் சோதனைகளை நடத்தியது. சீனாவின் சோதனை குறித்து கேள்வி எழுப்பிய போது, இந்த குறிப்பிட்ட சோதனையில் சீனா பயன்படுத்திய தொழில்நுட்பம் குறித்த சரியான விவரங்கள் ஊடக ஆதாரங்கள் மூலம் தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான ஹைப்பர்சோனிக் வாகனங்கள் முதன்மையாக ஸ்க்ராம்ஜெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. இந்த மிகவும் சிக்கலான தொழில்நுட்பம், அதிக வெப்பநிலையைக் கையாளக்கூடியதாக இருக்க வேண்டும், இது ஹைப்பர்சோனிக் அமைப்புகளை மிகவும் விலை உயர்ந்ததாக ஆக்குகிறது. அந்த தீவிர நிலைமைகளில் நீங்கள் எவ்வளவு காலம் கணினிகளைத் தக்கவைக்க முடியும் என்பது பற்றியது. உலகின் பெரும்பாலான இராணுவ சக்திகள் ஹைப்பர்சோனிக் அமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன என்று மூத்த டி.ஆர்.டி.ஒ. ஆராய்ச்சியாளர் கூறினார். ஸ்க்ராம்ஜெட்டுகள் என்பது ஒலியின் வேகத்தின் பெருக்கத்தில் காற்றின் வேகத்தை கையாள வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள் ஆகும்.

இந்தியாவுக்கான தாக்கங்கள் என்ன?

இந்த சோதனையை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வர வேண்டும். குறிப்பாக இந்தியா. சமீபத்திய காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் உறவுகளை கருத்தில் கொண்டு இந்தியா இதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற ஏர் மார்ஷலும், முன்னாள் விமானப்படை துணை தலைவருமான பூஷன் கோகலே தெரிவித்தார். இத்தகைய திறன்கள் நம்முடைய விண்வெளி சொத்துகளுக்கு அச்சுறுத்துலை தருகின்றன. ன. இந்த வேகத்தில் செயல்படும் தாக்கும் சக்தி, அதே வேகத்தில் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டிய தேவையை அதிகரிக்கிறது என்று கூறினார்.

இந்தியாவும் ஹைப்பர்சோனிக் திட்டங்களில் ஆராய்ச்சி செய்து வருகிறது. இதுவரை விண்வெளி சொத்துக்களைப் பொறுத்தவரையில், ஏசாட் சோதனை மூலம் இந்தியா ஏற்கனவே தனது திறன்களை நிரூபித்துள்ளது.

ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பம் டி.ஆர்.டி.ஒ மற்றும் இஸ்ரோ மூலம் உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. டி.ஆர்.டி. ஒ. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் Hypersonic Technology Demonstrator Vehicle (HSTDV) ஏவுகணையை வெற்றிகரமாக பறக்க செய்தது. ஒரு நிலையான அக்னி ஏவுகணையின் ராக்கெட் மோட்டர் 30 கிமீ உயரத்திற்கு எடுத்துச் சென்றது. அங்கு திட்டமிட்டபடி வாகனம் பிரிக்கப்பட்டு, ஹைப்பர்சோனிக் எரிப்பு நீடித்தது. இந்த ஏவுகணை பிறகு 20 வினாடிகளுக்கு மேல் ஒலியின் வேகத்தை விட ஆறு மடங்கு வேகத்தில் விரும்பிய விமானப் பாதையில் தொடர்ந்தது.

ஸ்க்ராம்ஜெட் ஒரு புத்தகம் போன்று உருவாக்கப்பட்டது. இந்த வெற்றிகரமான சோதனையின் மூலம், ஹைப்பர்சோனிக் சூழ்ச்சிகளுக்கு ஏரோடைனமிக் உள்ளமைவு, பற்றவைப்புக்கு ஸ்க்ராம்ஜெட் உந்துதல் மற்றும் ஹைப்பர்சோனிக் ஓட்டத்தில் நீடித்த எரிப்பு, உயர் வெப்பநிலை பொருட்களின் தெர்மோ-ஸ்ட்ரக்சுரல் குணாதிசயம், ஹைப்பர்சோனிக் வேகத்தில் பிரிக்கும் மெக்கானிசம் போன்ற பல முக்கியமான தொழில்நுட்பங்கள் நிரூபிக்கப்பட்டன என்று டி.ஆர்.டி.ஓ ஒரு அறிக்கையில் கூறியது.

கடந்த டிசம்பர் மாதம் டிஆர்டிஓவின் மேம்பட்ட ஹைப்பர்சோனிக் விண்ட் டன்னல் (எச்டபிள்யூடி) சோதனை வசதி ஹைதராபாத்தில் திறக்கப்பட்டது.

source https://tamil.indianexpress.com/explained/china-hypersonic-glide-vehicle-test-356897/