புதன், 27 அக்டோபர், 2021

திமுக அமைச்சர்களைக் குறி கண்காணித்து அம்பலப்படுத்த முயற்சி!

 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு, சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ள தமிழக பாஜக திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளை நெருக்கமாகக் கண்காணித்து விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.

முந்தைய அதிமுக அரசுடன் சுமூகமான உறவை மேற்கொண்டு வந்த பாஜக, தற்போது திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்த இடத்தில் தனது வியூகத்தை மாற்றியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியும் பதிலடி கொடுத்து எதிர்வினையாற்றினார். இப்படி பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து திமுக அமைச்சர்களை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அரசியல் விவாதங்களை உருவாக்குவதில் தமிழக பாஜக வெற்றி பெற்றுள்ளது. மின்சாரத் துறையில் மின்சாரம் மற்றும் நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தங்களை வெற்றிகரமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்” என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அதேபோல, போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்குத் தனியாரிடமிருந்து தீபாவளி இனிப்புகள் வாங்க திட்டமிடப்பட்டது குறித்து பாஜக அம்பலப்படுத்தியதன் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. இப்போது அரசு நடத்தும் ஆவின் இனிப்புகளை வழங்க அரசு பரிசீலித்து வருகிறது என்று பாஜக நிர்வாகி கரு. நாகராஜன் கூறினார்

எங்கள் கட்சித் தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மாதம் தோறும் மின்சார மீட்டர் கணக்கெடுப்பு கொண்டு வர வேண்டும் என்று திமுகவிடம் கேட்டுக்கொள்கிறோம் என்று கரு. நாகராஜன் கூறினார்.

“மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போன்ற முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக அவர்களை எங்கள் கட்சி நிர்வாகிகள் அம்பலப்படுத்த முயன்று வருகின்றனர். முன்பு பாஜகவை புறக்கணித்த இந்த அமைச்சர்கள் இப்போது எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என்று பாஜக பாஜக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

“அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் மீது நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகளில் இருந்தும் நாங்கள் விலகி இருக்கிறோம். எங்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பெரும்பாலானோர் திமுக ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த விவகாரம் குறித்து கருத்து கூறுவதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும், எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியும் மின்சார வாரியத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் டெண்டர் விவகாரத்தில் மோதி வருகின்றனர் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-bjp-functionaries-targeting-dmk-ministers-360578/