புதன், 6 அக்டோபர், 2021

லக்கிம்பூர் வன்முறை: 2017

 

05 10 2021 உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல் வேறு தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியே களவர பூமி போல் காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக, கடந்த 2017 தேர்தலில் மாவட்டத்தில் எட்டு இடங்களையும் கைப்பற்றிய பாஜகவுக்கு, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அங்கு வெல்ல முடியாத சூழ்நிலை உருவாகிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், 2012 தேர்தலில் பாஜகவால் அங்கு ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. பின்னர், விவசாயிகளுடன் ஏற்பட்ட நட்புறவு, சீக்கிய மக்களுடன் வலுவான இணைப்பு ஆகியவை, பாஜகவிற்கு 2017இல் அமோக வெற்றியைத் தேடிக்கொடுத்தது.


உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய மாவட்டம் லக்கிம்பூர் கெரி தான். இங்கு பிராமணர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இது 80% கிராமப்புறமாகும், பெரும்பான்மையான மக்கள் கரும்பு விவசாயம் செய்வதில் உள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் பிரிவினைக்குப் பிறகு, இங்கு குடியேறிய சீக்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

லக்கிம்பூர் வன்முறை தாக்கம் பிலிபித், ஷாஜகான்பூர், ஹர்தோய், சீதாபூர் மற்றும் பஹ்ரைச் போன்ற எல்லை மாவட்டங்களிலும் எதிரோலிக்க வாய்ப்புள்ளதாக ஆளும் பாஜக கட்சி தரப்பில் அச்சத்தில் உள்ளனர். ஏனென்றால், 2017இல் இந்த 6 மாவட்டங்களில் உள்ள 42 தொகுதிகளில் 37ஐ பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் கூட்டணியுடன் சமாஜ்வாதி பார்ட்டியால் வெறும் 4 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இது மிகப்பெரிய தோல்வியாக கருதப்பட்டது. ஏனென்றால், 2012 சட்டப்பேரவை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி அங்கு 25 இடங்களை கைப்பற்றியுள்ளது. பகுஜன் சமாஜ்வாதி கட்சி 10 இடங்களையும், பாஜக 5 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றின.
 வன்முறை சம்பவம் நடந்த நிகசன் தொகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளாகவே பாஜகதான் வெற்றிபெற்றுள்ளது. 


தொகுதிகளில் வெற்றிபெறுவது மட்டுமின்றி, தனது வாக்கு எண்ணிக்கைகளையும் 2012 முதல் 2017 இடையில் பாஜக கணிசமாக உயர்த்தியுள்ளது. கோலா கோகர்நாத் தொகுதியில் பாஜகவின் வாக்கு எண்ணிக்கை 3.88 சதவிகிதத்தில் இருந்து 49 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கஸ்தா தொகுதியில் 7.36இல் இருந்து 44 ஆக அதிகரித்துள்ளது. சவுரஹாவில் 5.89 சதவிகிதத்தில் இருந்து 36 ஆகவும், பலியாவில் 11.34 இல் இருந்து 51 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் லக்கிம்பூர் நகர தலைவர் சித்தார்த் திரிவேதி, “இச்சம்பவத்தின் காரணமாக, பாஜகவினர் ஆதரவை இழக்க போகின்றனர். வரவிருக்கும் தேர்தலில் நிச்சயம் தோல்வியை தழுவ உள்ளனர். யார் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தோற்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ” என்றார்.
தொடர்ந்து பேசிய உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர், டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம், உத்தர பிரதேசத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், தற்போது லக்கீம்பூர் சம்பவத்தால் விவசாயிகள்  ஆக்ரோஷமாக உள்ளனர். விவசாயிகள் இல்லாதவர்களிடமிருந்து ஆதரம் பெருகியுள்ளன. இது ஆளும் கட்சிக்கு சரியானது இல்லை என்றார்.

source https://tamil.indianexpress.com/india/bjp-watches-warily-had-swept-lakhimpur-kheri-in-2017-elections/