வியாழன், 7 அக்டோபர், 2021

டெல்லி ரகசியம்: ...அடுத்த பயணம் காஷ்மீர்?

 மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, இம்மாத இறுதியில், காஷ்மீர் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு, மத்திய அரசின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 5, 2019 அன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததையடுத்து, முதன்முறையாக அமித் ஷா காஷ்மீர் செல்கிறார். அவர், அக்டோபர் 22,23 ஆம் தேதிகளில் செல்லவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பயணத்திற்கு முன்பு, அவர் அந்தமான் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறப்பு விருந்தினர்
உ.பி லக்கிம்பூர் கலவரத்தால், அப்பகுதியே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மத்திய இணையமைச்சர் அஜய் மிஷ்ரா பதவி விலக வேண்டும் , அவரது மகன் உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலுக்கிறது. இந்நிலையில், அமைச்சர் அஜய் மிஷ்ராவை வரும் அக்டோபர் 7 அன்று சிறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மிஷ்ரா தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இனி இவர் டாக்டர் 
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இனிமேல் டாக்டர் மன்சுக் மாண்டவியா என அழைக்கப்படவுள்ளார். ஆம், அவர் பிஹெச்டி வெற்றிகரமாக முடித்துள்ளதால், தனது பெயருக்கு முன்னால் Dr என்ற பட்டத்தைச் சுட்டிக்கொள்ளவுள்ளார். அவர், ‘Role of Gram Vidhyapiths in Community Development and Future Challenges’என்ற தலைப்பில் அரசியல் பிரிவில் குஜராத் குஜராத் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தனது பிஹெச்டி படிப்பை முடித்தார். இதுகுறித்து ட்வீட் செய்த மன்சுக், இந்த பிஹெச்டி பயணம் என்னை அறிவியல் பயணத்துக்கு அழைத்து சென்றுள்ளது. இது என் வாழ்க்கையில் நடைபெறும் மிக முக்கியமான மைல்கல் ஆகும்” என்றார்.

source https://tamil.indianexpress.com/india/home-minister-amit-shah-is-likely-to-visit-jammu-and-kashmir-later-this-month/

Related Posts: