கோயம்புத்தூரில் உள்ள இந்திய விமானப்படை நிர்வாகக் கல்லூரியில் (ஏ.எஃப்.ஏ.சி) சக இந்திய விமானப்படை அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டிய 28 வயது பெண்ணுக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்படவில்லை என்று இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதரி புதன்கிழமை தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய விமாரப்படை தலைவர் புதன்கிழமை ஊடகங்களிடம் பேசினார். அப்போது அவர், இந்திய விமானப்படை தயார் நிலையில் இருந்து சரியான கட்டுப்பாட்டு கோடு முதல் இந்தியாவின் ட்ரோன் திறனை மேம்படுத்துவது வரை பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார்.
விமானப்படை மருத்துவமனையில் சட்டவிரோதமான நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டதாக பெண் எஃப்.ஐ.ஆர்-ல் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, ஏர் சீஃப் மார்ஷல் சௌத்ரி கூறுகையில், “இதுபோன்ற எந்த ஒரு சம்பவத்திலும் இந்தியா விமானப்படை சட்டம் மிகவும் கண்டிப்பாக உள்ளது. ஒரு பெண் அதிகாரியிடம் இருவிருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக தவறாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு விரல் பரிசோதனை செய்யப்படவில்லை. விதிகளை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். உரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று கூறினார்.
முன்னதாக, பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட விமான லெப்டினன்ட்டை இந்திய விமானப்படை காவலில் எடுத்தது. பாதிக்கப்பட்ட பெண் தமிழ்நாடு காவல்துறையில் அளித்த புகாரில், இந்திய விமானப்படையில் உள்ள அவரது மூத்த அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு எதிரான புகாரை வாபஸ் பெறும்படி கட்டாயப்படுத்தியதாக கூறியிருந்தார்.
“விமானப்படை குற்றம் சாட்டப்பட்டவர்களை காவலில் எடுக்க கேட்டது. நீதிமன்றமும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தால் மட்டுமே நான் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும்” என்று கோயம்புத்தூர் நகர போலீஸ் கமிஷனர் தீபக் டி தாமோர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். அந்த பெண் அவர்கள் துறைக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாததால் காவல்துறையை அணுகினார்.
அந்த பெண் செப்டம்பர் 20ம் தேதி காவல் துறையில் புகார் அளித்தார். குற்றம்சாட்டப்பட்டவர் செப்டம்பர் 25ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை இந்திய விமானப்படை காவலுக்கு மாற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவு செப்டம்பர் 30ம் தேதி வந்தது.
source https://tamil.indianexpress.com/india/indian-air-force-chief-coimbatore-tamil-nadu-rape-case-no-two-finger-test-done-351534/