ஞாயிறு, 10 மே, 2026

தமிழக முதல் அமைச்சராக காலை 10 மணிக்கு பதவி ஏற்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு

 


vjay

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க 108 இடங்களை கைப்பற்றியது. இதில் த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றி பெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், சட்டசபையில் த.வெ.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும். 

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் 5 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தது. ஆனாலும், பெரும்பான்மைக்கு இன்னும் இடங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்டு (2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தது.

இதையடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை த.வெ.க தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரிடம் வழங்கினார்.

அந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆட்சியமைக்க த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய், தமிழக முதல்வராக பதவியேற்கும் விழா நாளை காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

10 05 2026 

விஜய் உடன் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உட்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கினாலும் கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என விஜய் விரும்புவதாக கூறப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tvk-leader-vijay-to-take-oath-as-the-chief-minister-of-tamil-nadu-11818075