யு.ஏ.இ துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல்.
/indian-express-tamil/media/media_files/2026/05/06/iran-2026-05-06-12-46-57.jpg)
அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்றது. தற்போது இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. எனினும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரானும் அமெரிக்காவும் முடக்கி வைத்து உள்ளன. இந்த சூழலில் அமெரிக்காவின் நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா துறைமுகத்தின் மீது ஈரான் ராணுவம் 15 ஏவுகணைகளை வீசியுள்ளது. மேலும் ட்ரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இதில் துறைமுக பகுதியில் பணியாற்றிய 3 இந்தியர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து அமீரக ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘ஈரான் வீசிய ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை நடுவானில் அழித்துவிட்டோம். ஆனால் சில ஏவுகணைகள் எண்ணெய் கிடங்குகளில் விழுந்து தீப்பற்றியது. 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தன.





