நாங்கள் தோற்கவில்லை, முதல்வர் பதவியை ராஜினாமா பண்ண முடியாது: மம்தா பானர்ஜி ஆவேசம்
/indian-express-tamil/media/media_files/2026/05/05/mamata-pc-partha-paul-2026-05-05-18-32-44.jpg)
மேற்குவங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 200-க்கு அதிகமாக தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வின் என்.டி.ஏ கூட்டணி தனி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தாலும், தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று மமதா பானர்ஜி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நிறைவு பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று (மே 4) வெளியான நிலையில், தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அசாமில் மீண்டும் பா.ஜ.க.வின் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த மம்தா பாணர்ஜியன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 207 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. முதல்முறையாக மேற்குவங்கத்தில் பெரும்பான் பெற்றுள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் தனது முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய முதல்வர் மமதா பானர்ஜி, நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை. நான் ராஜ்பவனுக்கு போக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்ம் என்று ஆவேசமாக கேட்டுள்ளார்
தனது கட்சி உறுப்பினர்களான டெரெக் ஓ பிரையன் மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மமதா பானர்ஜி, “நாங்கள் தோற்கவில்லை. நான் ராஜினாமா செய்ய மாட்டேன். நான் ராஜ் பவனுக்குச் செல்லும் கேள்வியே எழவில்லை என்று கூறிய மமதா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மேற்கு வங்கத் தேர்தலில் "நேரடியாகத் தலையிடுவதாக" குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை தேவை என்றும், கட்சி ஒரு உண்மை கண்டறியும் குழுவை அமைக்கும் என்றும் மம்தா கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வராக 15 ஆண்டுகள் ஆட்சி செய்த மமதா பானர்ஜி, தேர்தலுக்கு முன்பே திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதாகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தான் இந்தத் தேர்தலின் "வில்லன்" என்றும் கூறினார். “மக்களின் ஜனநாயக உரிமைகளையும், இ.வி.எம் (EVM) இயந்திரங்களையும் கொள்ளையடிக்க இந்தத் தேர்தலின் வில்லனாக தலைமை தேர்தல் ஆணையர் மாறியுள்ளார் என்று சொல்ல வருத்தமாக இருக்கிறது.
வாக்குப்பதிவு முடிந்த பிறகும் இ.வி.எம் இயந்திரங்களில் 80-90% சார்ஜ் எப்படி இருக்க முடியும்? தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்கள் ஆட்களைக் கைது செய்யத் தொடங்கினர். எல்லா இடங்களிலும் சோதனை நடத்தினர்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மத்தியப் பார்வையாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி மத்திய இணைப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசு, மே 9-ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு பதவியேற்கும் என்று கட்சியின் மாநிலத் தலைவர் சாமிக்க பட்டாச்சார்யா தெரிவித்தார்.





