அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டம் திட்டத்திற்கு நிர்வாக ரீதியிலான ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய நிதிஅமைச்சர் பன்னீர்செல்வம், அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கப்படும் என கடந்த செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தை சுட்டிக்காட்டினார்.
இதனை தொடர்ந்து அந்த திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டதாக தெரிவித்தார். மத்திய அரசுக்கு மீண்டும் கருத்துரு அனுப்பப்படும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து கள ஆய்வு மேற்கொண்டு ஆவணங்கள் தயாரித்தல் போன்றவற்றிற்காக 3 கோடியே 27 லட்சம ரூபாய் செலவில் ஆலோசனை நிறுவனம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.