வியாழன், 17 மார்ச், 2016

இறைவன் விதித்த கடமைக்கு எதிர்க்கும் உனது மடமைக்கு

உளறிக் கொட்டும் தஸ்லீமா
உண்மையில் நீ ஒரு முஸ்லீமா?
சிலர்கள் உன்னைப் இயக்குகிறார்
சில்லறை காட்டி மயக்குகிறார்
இறைவன் விதித்த கடமைக்கு
எதிர்க்கும் உனது மடமைக்கு
விரைவில் தகுந்த பதில் தொடங்கும்
வீங்கிய தலைக்கணம் அதில்
அடங்கும்.
ஐந்தை ஒன்றாய் குறைக்கும் படி
ஆவேசமாய் நீ குரைக்கும் படி
சைத்தான் உன்னை ஏவுகிறான்
சாக்கடையில் கிடந்து கூவுகிறாய்
உனக்கு வணங்க முடியாதா
ஒழுக்கம் உனக்குப் பிடியாதா
தனக்குள் அதனை வைத்துக் கொள்
தவிர்க்கனும் உனது சைத்தான் சொல்
பள்ளிகளை நீ மூடச் சொன்னாய்
பைத்தியம் பிடித்த மூடப் பெண்ணாய்
எல்லாம் ஒரு நாள் நீ புரிவாய்
எது உண்மையென நீ அறிவாய்.
-MOHAMED NIZOUS-