வியாழன், 31 மார்ச், 2016

தீவிரவாதிகள் இந்தியாவின் இறையான்மையை சொல்லி தருவதா ???



பாரத் மாதா கீ ஜெய் என்று கூற மறுத்த மதரஸா மாணவர்கள் மீது தாக்குதல்!-
ஒருவரது கை ஒடிந்தது!
புதுடெல்லி:
டெல்லி பேகம்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதரஸா இடைவேளையில் பூங்காவிற்கு வந்த மாணவர்களிடம், 5 பேரைக் கொண்ட இந்துத்துவா வெறிக் கும்பல், ’பாரத் மாதா கீ ஜெய்’ என்று கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதற்கு மறுத்த காரணத்தால் மாணவர்களை அக்கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.
இத்தாக்குதலில் தில்காஷ் என்ற 17 வயதான மதரஸா மாணவரின் கை ஒடிந்தது.2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் இறையான்மை காக்கிண்றோம் என்ற பெயரில் காவி பாசிச சக்திகள் தொடர்ச்சியாக மத வெறிகளை அரங்கேற்றி வருகிறார்கள்.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட இஸ்லாமியர்களுக்கு,காந்தியை சொட்டு கொன்ற காவி தீவிரவாதிகள் இந்தியாவின் இறையான்மையை சொல்லி தருவதா ???