அன்றாடம் சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தும் ஓர் பொருள் தான் பெருங்காயத் தூள். இந்த பெருங்காயத் தூள் பல்வேறு நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. அதனால் தான் சமையலில் அதனை சேர்த்து வருகிறோம்.
பெருங்காயத் தூளில் ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நியாசின், கரோட்டீன், ரிபோஃப்ளேவின் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.
மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஆன்டி-வைரல் போன்றவையும் உள்ளது.
இப்போது உணவில் பெருங்காயத் தூளை சேர்ப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். இனிமேல், அதன் நன்மை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.
பெருங்காயத் தூளில் உள்ள ஆன்டி-பயாடிக், ஆன்டி-வைரல், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை போன்றவற்றினால் சுவாசக் கோளாறுகளான ஆஸ்துமா, வறட்சி இருமல் போன்றவை குணமாகும். மேலும் இது நெஞ்சு சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும். அதற்கு பெருங்காயத் தூளில், சுக்குப் பொடி மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் மூன்று முறை உட்கொண்டு வாருங்கள்.
பெருங்காயத் தூள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் குணமாக்க உதவும். அதில் செரிமானமின்மை, வயிற்று பொருமல், வயிற்றுப்புழுக்கள், சீரற்ற குடலியக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆகவே தினமும் சமைக்கும் போது உணவில் தவறாமல் பெருங்காயத் தூளை சேர்த்து வாருங்கள்.
பெருங்காயத் தூளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மையினால், இது அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும். உங்களுக்கு தினமும் தலைவலி கடுமையாக வருமாயின், ஒரு டம்ளர் நீரில் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து, தினமும் 3 முறை குடித்து வாருங்கள்.
பெருங்காயத் தூள் பல் வலி மற்றும் ஈறு நோய்களில் இருந்தும் நல்ல பாதுகாப்பு அளிக்கும். முக்கியமாக இது ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுக்கும்.
பெருங்காயத் தூள் காது வலியில் இருந்து விடுதலை அளிக்கும். அதற்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் பெருங்காயத் தூளை சேர்த்து, அதனை காதில் சில துளிகள் விட காது வலி குறையும்.
பெருங்காயத் தூளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அழித்து, ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து உடலைப் பாதுகாக்கும். எனவே புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், உணவில் பெருங்காயத் தூளை தவறாமல் சேர்த்து வாருங்கள்.