புதுடெல்லி, மார்ச் 30-
நம் நாட்டில், ஜனவரி மாத இறுதியில், தொலைபேசி இணைப்புகளின் (லேண்டுலைன்+செல்போன்) மொத்த எண்ணிக்கை 104 கோடியை தாண்டியுள்ளது. அம்மாதத்தில் நாடு முழுவதுமாக மொத்தம் 70 லட்சம் புதிய செல்போன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனவரி மாதத்தில் தொலைபேசி இணைப்புகளின் (லேண்டுலைன்+செல்போன்) எண்ணிக்கை 104.33 கோடியாக உயர்ந்துள்ளது. 2015 டிசம்பர் இறுதியில் அது 103.64 கோடியாக இருந்தது. ஆக, தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 0.66 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில், ஜனவரி மாதத்தில், ஒட்டுமொத்த அளவில் தொலைத்தொடர்பு அடர்த்தி 82.30-ஆக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் அது 81.83-ஆக இருந்தது. நகர்ப்புறங்களில் 153.02-ஆகவும், கிராமப்புறங்களில் 50.33-ஆகவும் தொலைத்தொடர்பு அடர்த்தி உள்ளது. (100 பேருக்கு எத்தனை தொலைபேசி இணைப்புகள் இருக்கிறது என்பதை காட்டும் விகிதமே தொலைத்தொடர்பு அடர்த்தியாகும்).
பொதுத்துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்களின் லேண்டுலைன் இணைப்புகளின் எண்ணிக்கை 2.55 கோடியில் இருந்து 2.53 கோடியாக குறைந்துள்ளது. இதில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டும் சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறது. அதே மாதத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 23,117 புதிய லேண்டுலைன் இணைப்புகளை வழங்கியுள்ளது.
ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 70.8 லட்சம் உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒட்டுமொத்த எண்ணிக்கை 101.79 கோடியாக அதிகரித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் 25 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கி முதலிடத்தில் உள்ளது.
அடுத்து ஐடியா செல்லுலார் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 12.51 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. வோடாபோன் நிறுவனம் வழங்கிய புதிய இணைப்புகளின் எண்ணிக்கை 11.12 லட்சமாகும். இந்நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நான்காவது இடத்தில் இருக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 9.25 லட்சம் புதிய செல்போன் இணைப்புகளை வழங்கியுள்ளது. டெலிநார் நிறுவனம் 7.24 லட்சம் புதிய இணைப்புகளையும், ஏர்செல் 4.35 லட்சம் இணைப்புகளையும் வழங்கியுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் வழங்கிய புதிய இணைப்புகளின் எண்ணிக்கை 3.15 லட்சமாகும்.
டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய நிறுவனங்கள் வழங்கியுள்ள புதிய செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை முறையே 75,654 மற்றும் 9,220-ஆக இருக்கிறது. இந்த நிலையில் வீடியோகான் டெலிகாம் நிறுவனம் மற்றும் சிஸ்டெமா ஷியாம் டெலி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே 1.50 லட்சம் மற்றும் 1.12 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருக்கின்றன.
ஜனவரி இறுதி நிலவரப்படி ஒட்டுமொத்த அளவில் அகன்ற அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 13.65 கோடியிலிருந்து 14 கோடியாக அதிகரித்துள்ளது. அம்மாதத்தில் செல்போன்களில் அகன்ற அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 12.29 கோடியாக உள்ளது.
இதில் பார்தி ஏர்டெல் நிறுவனம் அதிகபட்சமாக 3.27 கோடி இணைப்புகளை வழங்கியிருக்கிறது. வோடாபோன் 2.62 கோடி இணைப்புகளை வழங்கியுள்ளது. ஐடியா செல்லுலார் (2.2 கோடி), பி.எஸ்.என்.எல். (2 கோடி), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (1.54 கோடி) ஆகிய நிறுவனங்கள் அடுத்த இடங்களில் இருக்கின்றன.