வியாழன், 31 மார்ச், 2016

கூகுள் புகைப்படத்தில் புத்தம் புதிய வசதி


google_photos_002புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ எடிட்டிங் உட்பட பல வசதிகளுடன் கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட அப்பிளிக்கேஷனே கூகுள் போட்டோஸ் (Google Photos) ஆகும்.
தற்போது இம் மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட் சாதனங்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இப் பதிப்பில் எடிட் செய்யப்பட்ட போட்டோக்களை மீண்டும் பழைய நிலைக்கு (Undo Edits) மாற்றக்கூடிய வசதி கூடுதலாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ் வசதியினைப் பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட போட்டோவினை சேமிக்கும்போது அது ஒரிஜினல் போட்டோவின் மேல் தவறுதலாக சேமிக்கப்படின் மீண்டும் ஒரிஜினல் போட்டோவை பெறுவதற்கு பயன்படக்கூடியதாக இருப்பதும் விசேடமாகும்.