ஞாயிறு, 27 மார்ச், 2016

அரிசி உணவுக்கும் உருளைக்கும் ஒத்துவராது!


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கில் செய்த உணவு என்றால், ஒரு கை பார்த்துவிடுவது வழக்கம். உருளைக்கிழங்கில் நார்ச்சத்து இல்லாததால், சரியாக செரிமானம் ஆகாமல் மிக அதிகமான வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். அதை தவிர்ப்பது நல்லது.
 
ஏனெனில், அரிசியில் இருக்கும் அதே கார்போஹைட்ரேட் தான் உருளையிலும் இருக்கிறது. எனவே, அரிசி உணவு சாப்பிடும்போது, உருளைக்கிழங்கு நமக்குத் தேவையில்லை.
 
ஆனால், நாம் என்ன செய்கிறோம்? சாம்பார் சாதத்துக்கு உருளைக்கிழங்கை ரோஸ்ட் செய்து விரும்பி சாப்பிடுகிறோம். அரிசி உணவே இல்லாத சமயத்தில் கிழங்கை சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் உருளைக்கிழங்கை வேகவைத்துதான் உண்ணவேண்டும்.
 
எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது. நார்ச்சத்து இல்லாததால், இரவில் சாப்பிடக்கூடாது. ஆனால், இதனுட‌ன் நார்ச்சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டால், அதன் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
12717993_1099216736803782_8439438236175010164_n