கவுகாத்தி, மார்ச் 29-
எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநில அரசுகளை கவிழ்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடி ஹிட்லரைப் போல் செயல்படுவதாக அசாம் மாநில முன்னாள் முதல் மந்திரி தருண் கோகாய் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக நிருபர்களின் கேள்விக்கு இன்று பதிலளித்த தருண் கோகாய், ‘இந்த நாட்டை ஹிட்லரைப் போல் ஆள வேண்டும் என மோடி முயற்சித்து வருகிறார். தற்போது உத்தரகாண்ட் மாநில அரசை கவித்ததுபோல் கடந்த ஆண்டு நூறு கோடி ரூபாயை செலவழித்து, 35 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி கவர்னரின் உதவியுடன் எனது தலைமையிலான அசாம் அரசையும் பா.ஜ.க., கவிழ்த்து விட்டது’ என குறிப்பிட்டார்