வியாழன், 31 மார்ச், 2016

உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் தர்பூசணி ஸ்மூத்தி!


29-1459255529-5-watermelonஉடலினுள் உள்ள நச்சுக்களை நீக்கினாலே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்று பலர் நம்புகின்றனர். இதற்கு கெமிக்கல் முறை முற்றிலும் ஒத்து வராத ஒன்று என்பதை மனதில் வைத்து கொள்ள வெண்டும். உடலின் நச்சு தன்மைகளை நீக்க இயற்கையான முறைகளை பின்பற்றுதல் அவசியம்.
 
இயற்கையான பழங்கள் காய்கறிகளை வைத்து இதை நல்ல முறையில் செய்ய முடியும். பழம் மற்றும் காய்களை மிருதுவாக்கி அதை வைத்தே உடலின் நச்சுக்களை நீக்க முடியும். காய் மற்றும் பழங்களை மிருதுவாக்கி அதாவது ஸ்மூத்திகளாக செய்து உங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இடைப்பட்ட உணவுகளை திட்டம் தீட்டி கொள்ள வேண்டும்.
 
இவற்றை முறையான நேரங்களில் உட்கொள்வதால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களைப் போக்கி புத்துணர்ச்சி அளிப்பதுடன் ஆரோக்கியத்தையும் வழங்கும்
 
ஸ்மூத்தி செய்ய அவசியமானவை பொதுவாக ஸ்மூத்தி செய்ய நல்ல தரமான பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் பால் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடலின் மெட்டாபாலிக் தன்மை, வைட்டமின், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சத்துக்கள் போன்றவற்றை அதிகரிக்க முடியும்.
 
டயட் பாதிக்காது பல விதங்களில் ஸ்மூத்திக்களை செய்ய முடியும். இதனால் உங்கள் டயட் பாதிக்காத படி உங்கள் உடலின் நச்சு தன்மைகளை நீக்க முடியும். பெர்ரிப் பழங்கள், கேரட், கீரைகள் மற்றும் காய்கறிகள், போன்றவைகள் உங்கள் உடலுக்கு மிக மிக தேவை.
 
கிரான்பெர்ரி, தர்பூசணி, அன்னாசி, கிவி மேற்கூறிய பழங்கள் மிகவும் நல்லது. முறையான அளவில் இவற்றை உட்கொளவதால் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கவும் கெட்ட சக்தியை வெளியேற்றவும் முடியும். இந்த ஸ்மூத்தியில் நீங்கள் சில ஆரோக்கியமானவற்றை சேர்த்தாலும் ஆரோக்கியம் தான்.
 
சியா விதை உங்கள் ஸ்மூத்தியில் சியா விதைகளை சேர்த்து கொள்ளவும். சால்மன் மீனை விட இதில் 8 மடங்கு ஒமேகா-3 அமிலக்கூறுகள் அதிகமாக உள்ளன. பாலை விட 6 மடங்கு அதிகமாக கால்சியம் உள்ளது மற்றும் கீரையை விட 3 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து உள்ளது.
 
வாழைப்பழத்தை விட 2 மடங்கு அதிகமாக பொட்டாசிய சத்தும் ப்ராக்கோலியை விட 15 மடங்கு மெக்னீசியமும், ப்ளாக்ஸை விட 2 மடங்கு நார்ச்சத்தும், கிட்னி பீன்ஸ்களை விட 6 மடங்கு புரதமும், அவலை விட 4 மடங்கு செலினியமும், ஒரு முழு கோப்பை பாலை விட 9 மடங்கு பாஸ்பரசும் மற்றும் ப்ளுபெர்ரியை விட ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு கூறுகள் நிறைந்ததாகவும் உள்ளது.
 
தர்பூசணி ஸ்மூத்தி செய்ய தேவையானவை தர்பூசணி – 3 கப் (துண்டுகளாக்கப்பட்டது) பச்சை திராட்சை – 1 கப் எலுமிச்சை – 1-2 மிளகுத் தூள் – 1 சிட்டிகை இளநீர் – 1/4 கப்
 
செய்முறை
 
* முதலில் தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும்.
 
* பின் மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து பரிமாறினால், தர்பூசணி ஸ்மூத்தி ரெடி!