வியாழன், 31 மார்ச், 2016

கரும்புள்ளிகளை எளிதில் நீக்குவதற்கான அற்புத வழிகள்!


பலருக்கும் கரும்புள்ளிக்கும், முகப்பருவிற்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. கரும்புள்ளி என்பது முகப்பருவின் ஆரம்ப நிலை, ஆனால் முகப்பரு அல்ல. கரும்புள்ளிகளானது சருமத்துளைகளில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்களின் தேக்கத்தால் வருபவை.
இந்த கரும்புள்ளிகள் பெரும்பாலும் மூக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தான் வரும். இது இருந்தால் அப்பகுதி சொரசொரவென்று மென்மையின்றி இருக்கும். இங்கு கரும்புள்ளிகளை எளிதில் நீக்குவதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் கரும்புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.
முட்டையின் வெள்ளைக்கரு கரும்புள்ளிகளைப் போக்க உதவும். இதனை முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி, சருமத்துளைகள் இறுக்கப்படும்.
பெட்டோனைட் க்ளே மாஸ்க், சருமத்துளைகளில் உள்ள எண்ணெய், அழுக்குகள் போன்றவற்றை முற்றிலும் வெளியேற்றும். இதற்கு அதில் உள்ள கனிமச்சத்துக்கள் தான் முக்கிய காரணம்.
தேனில் ஆன்டி-பாக்டீரியல் பொருளும், பாலில் லாக்டிக் அமிலமும் உள்ளது. இவை சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் தேனையும் பாலையும் ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, கழுவி வர கரும்புள்ளிகளைத் தடுக்கலாம்.
பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து உலர வைத்து, பின் ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும். அப்படி செய்வதால் அவை சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள், எண்ணெய் பசை போன்றவற்றை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.
இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து, முகத்தை ஸ்கரப் செய்து வர வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், கரும்புள்ளிகள் அகலும். முக்கியமாக இந்த முறையை பின்பற்றிய பின் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.